சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா – நன்றி தெரிவித்த ஆர் கே செல்வமணி!

சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா – நன்றி தெரிவித்த ஆர் கே செல்வமணி!

Loading...

சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நடிகை நயன்தார அ20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளை முதல் தமிழகம் எங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.

Loading...

இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் எப்போது படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் முதன் முதலாக தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் (10 லட்சம்), ரஜினி (50 லட்சம்), விஜய்சேதுபதி (10 லட்சம்), தயாரிப்பாளர் தாணு (250 மூட்டை அரிசி)  மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் (150 அரிசி மூட்டை) ஆகியோர் நிவாரணமாக அளித்திருந்தனர். இந்த உதவித்தொகைகளை ஃபெப்ஸி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அளித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன்(10 லட்சம்), நடிகர் தனுஷ் (15 லட்சம்), இயக்குனர் ஷங்கர் (10 லட்சம்), பி வாசு (1 லட்சம்) என நிதியுதவி அளித்துள்ளனர். இதுதவிர இயக்குநர் ஹரி 100 அரிசி மூட்டைகள், நடிகர் சூரி (8 அரிசி மூட்டைகள்).  மனோபாலா (10 அரிசி மூட்டைகள்) என பொருட்களாக அளித்துள்ளனர். தமிழ் சினிமா நடிகைகள் இதுவரை எந்த வொரு நிதியுதவியையும் வழங்காத நிலையில் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இதையடுத்து தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி அவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*