Connect with us

#24 Exclusive

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையருக்கு அதிகாரம் வழங்கினார் டெல்லி ஆளுநர் ! போராட்டகாரர்கள் ஓட்டம் !!!

Published

on

டெல்லியில் தொடர் போராட்டங்கள் தேசவிரோத சம்பவங்கள் நடைபெறும் நிலையில் தேச பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கைது செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார். தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் எவரை வேண்டுமானாலும் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கலாம். இந்தியர்களை மட்டுமின்றி, இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரையும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க முடியும்.

NSI எனப்படும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு இருக்கிறது.இந்நிலையில், இன்று முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை டெல்லி காவல் ஆணையருக்கு இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரம் அளிக்கப்படுவதாக டெல்லி துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.

தற்போது டெல்லியில் போராடும் சிலர் இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானிற்கு ஆதரவாகவும் கோஷமிடுவதும், சில தீவிரவாத அமைப்புகள் போராட்டத்தை திசை திரும்புவதை தொடர்ந்து ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது, இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர், மேலும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ஓட்டம் எடுத்துள்ளனர்.

Loading...

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுபவரை சில மாதங்கள் சிறையில் அடைக்கலாம் என்பதால் பொழுது போக்கிற்காக கலந்து கொண்ட மாணவர்கள் இனி வீட்டிலேயே முடங்களாம் இல்லை என்றால் NSI சட்டம் பாயும் என்று கூறப்படுகிறது.

Loading...

©TNNEWS24

Loading...

Trending