பாஜகவில் உள்ள திராவிட ஆதரவாளர்களை கண்டறிய குழு! உத்திரபிரதேச பாணியில் களம் இறங்கிய நட்டா ! லிஸ்டில் இருப்பது யார் யார்?

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்பு பல நாட்களாக மாநில தலைவர் பதவி காலியாக இருந்தது அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி தலைவர்களின் பெயர்கள் பெயர்கள் அடுத்த மாநில தலைவர் பதவிக்கு பேசப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக..,

Loading...

மாநில தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக பதவி வகித்த முருகன் நியமனம் செய்யபட்டார். முருகன் பாஜக தலைவராக நியமனம் செய்யபட்டது தமிழக பாஜக நிர்வாகிகளை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் புரியாத புதிராக தற்போதுவரை இருந்துவந்துள்ளது.

முருகன் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டது பாஜக மேலிட பொறுப்பாளர் Bl சந்தோஷ் மூலம் பிரதமர் மோடி மற்றும் அமிட்ஷா எடுத்த முடிவாக பேசப்பட்டு வந்தது, மேலும் முருகன் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் செயல்படாத மாநில நிர்வாகிகள் நீக்கம், குறிப்பாக வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு, அமைப்பு பொறுப்பாளர்கள் ஆகியோர் மீதி நடவடிக்கை எடுக்க மேலிடம் குறிப்பிட்டு இருந்தது.

Loading...

ஆனால் அதன் பிறகுதான் கொரோனா பாதிப்பு ஒட்டு மொத்த உலகத்தையும் சேர்ந்து புரட்டி போட்டுவிட்டது, இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் டெல்லி பாஜக தலைமை பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது, அதில் ஒன்று தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பில் இருப்பவர்களில் யாரெல்லாம் எதிர் கட்சிகளுடன் தொடர்பில் உள்ளார்கள் என விபரங்களை சேகரிக்கிறது.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்ட பாஜக தொண்டர்கள் அல்லது ஆதரவாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையில் அவர்களுக்கு தேவையான சட்ட ரீதியிலான நடவடிக்கையை கூட வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர்கள் செய்யாமல் இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேலும் ஊடகங்களின் பெரு முதலாளிகள் மற்றும் எதிர் அரசியல் செய்யும் திமுக ஆதரவாளர்கள் பலர் பாஜகவில் பதவியில் இருப்பதாக மேலிடத்திற்கு புகார் சென்றுள்ளது, அதற்கு மிக சமீபத்திய எடுத்துக்காட்டு அரசகுமார், அவர் கட்சியில் இருந்துகொண்டே பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சனம் செய்த ஸ்டாலினை புகழ்ந்து பேசியதுடன் அடுத்த முதல்வர் அவர்தான் என குறிப்பிட்டார்.

எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார், இந்நிலையில் அவரை போன்று பலர் பாஜகவில் பொறுப்பில் இருப்பதாகவும் அவர்களை கலையெடுத்தால் மட்டுமே பாஜக தமிழகத்தில் வளரும் என கணக்கிடப்பட்டு பாஜக தேசிய தலைவர் jp. நட்டா பொறுப்பை மூன்று அணிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

அதில் ஒன்று தனியார் ஏஜென்சி, மற்றொன்று பத்திரிகையாளர் குழு, மூன்றாவது முன்னாள் உளவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு, இந்த குழுவில் அரசியலில் கட்சியை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, விரைவில் இந்த குழு களத்தில் இறங்கி மாவட்ட வாரியாக நிர்வாகிகள் பட்டியலை சேகரித்து, jp நட்டாவிற்கு முடிவுகளை அனுப்ப இருக்கிறது.

எனவே விரைவில் நிர்வாகிகள் குறித்த புகாரினை பெறுவதற்கு ஈமெயில் மற்றும் தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன, இதில் புகார் அளிக்கும் நபர்கள் ஆதாரத்துடன் நிர்வாகிகள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க படும் என கூறப்படுகிறது, கடந்த உத்திரபிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தலின் போது இதே பாணியை பின்பற்றி செயல்படாத நிர்வாகிகளை ஓரம்கட்டி தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் அதுபோன்ற மாற்றங்கள் அரங்கேறுமா?

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*