Connect with us

#24 Exclusive

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா: ஆச்சரிய புகைப்படம்

Published

on

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவில் தரையிறக்கும் பணி செப்டம்பர் 7ஆம் தேதி நடந்தது.

அப்போது நிலவில் தரையிறங்குவதற்கு ஒருசில மீட்டர் தூரம் இருந்தபோது திடீரென பூமியுடனான கட்டுப்பாட்டை விக்ரம் லேண்டர் இழந்தது. இதனால் தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருப்பது, ஆர்பிட்டார் மூலம் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்தனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவி செய்தது.

Loading...

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து நாசா மற்றும் இஸ்ரோ முயற்சித்த நிலையில் விக்ரம் -2 லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருப்பது தற்போது கண்டறிப்பட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்க முடியுமா? என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருவதாக தெரிகிறது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com