சொல்லிவைத்து அடித்த மோடி !! கல்வி தந்தைகள் ஆட்டம் முடிந்தது

மத்திய அரசு தனது 2014 மற்றும் 2019 ம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது அதில் ஒரு பகுதிதான் நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த புதிய கல்வி கொள்கை, இது பல தரப்பிலும் விவாதத்தை கிளப்பிய நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கல்வி தந்தைகளுக்கு மிக பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Loading...

21 – ம் நூற்றாண்டிற்கான மாணவர்களின் எதிர்காலத்தை முன்வைத்து கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது, அதன் அடிப்படையில் இனி பணக்காரர்கள் குழந்தைகள் பயில்வதை போல சாதாரண மாணவர்களும் மும்மொழியை விருப்ப பாடமாக எடுத்து பயிலலாம், இதன் மூலம் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும்.

அத்துடன் உயர் கல்வி நிலையத்தில் மிக பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது அதில் அனைத்து வகையான கல்லூரிகளிலும் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். என்றும் தற்போது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய பல்கலைக் கழகங்கள், தனிப்பட்ட பல்கலைக் கழகங்கள் என ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட விதிகள் உள்ள நிலையில், தனியார் மற்றும் அரசு உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்துக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்கும். இதன்மூலம், எந்தக் கல்வி நிறுவனமும் வரையறுக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

Loading...

இனி தனியார் கல்லூரி என்ற ஒன்று தனி பாடத்திட்டம், தனியாக கட்டணம் வசூலிப்பது, தன்னாட்சியாக பட்டம் கொடுப்பது போன்ற அனைத்து செயல்களும் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளன எப்படி நீட் தேர்வு என்ற ஒன்று வந்து மருத்துவத்துறையில் பல கோடி கொடுத்து சீட் வாங்கி மருத்துவம் படித்ததை ஒழித்ததோ அதே போல் புதிய கல்வி கொள்கை கல்வி தந்தைகளின் டொனேஷன் கனவை சிதைத்து விட்டன.

இனி தன்னாட்சி அதிகாரம் இணைப்பு கல்லூரி இருக்காது எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது, இதனையடுத்து பல கல்வி தந்தைகள் தங்களுக்கு ஆதரவான செய்தி ஊடகங்கள் மூலம் புதிய கல்வி கொள்கையை எதிர்க்க முழு மூச்சில் தயாராகி வருகிறார்களாம் ஆனால் மத்திய அரசு ஒரு அடிகூட புதிய கல்வி கொள்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தலின் போது ஏழை பணக்காரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை கொடுப்போம் என பிரதமர் மோடி உறுதி அளித்தார் அதன்படி இந்தியர்கள் அனைவருக்கும் இனி ஒரே மாதிரி கல்வி கிடைக்கும் எனவும் 34 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டுவந்த இந்த மாற்றம் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டது கல்வி தந்தைகள்தான்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3943 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*