பாஜகவில் இணைந்தார் பிரபல நடிகர் ! தமிழ் சினிமாவில் பாஜகவின் அதிரடி ஆரம்பம் !

சென்னை.,

Loading...

சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்த நடிகரும் இயக்குனருமான ‘R.K சுரேஷ்’ முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

பாஜக தற்போது தமிழகத்தில் 50 எம் எல் ஏ களை வருகிற சட்டமன்ற தேர்தலில் வெல்லக்கூடிய திட்டம் ஒன்றை வகுத்து அதற்கேற்ற வழியில் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது, இதற்கென பாஜகவில் பிரபலமான தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள், சின்னத்திரை பிரபலங்கள், டிக் டோக் பிரபலங்கள் என முக்கிய நபர்களை கட்சியில் இணைத்து அவர்களை வைத்து மத்திய அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மக்கள் இடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

Loading...

தமிழகத்தில் சினிமா நடிகர்களை கட்சியில் இணைக்கும் பொறுப்பு தென்மாவட்டத்தை சேர்ந்த பாஜக கருப்பு முருகானந்தத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே முதல் முயற்ச்சியாக பில்லா பாண்டி திரைப்படத்தின் ஹீரோ ஆர். கே சுரேஷை கட்சியில் இணைத்துள்ளார் கருப்பு, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும் வேலையில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இதுவரை அரசியல் பேசாத நடிகரை பாஜகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை ‘-
தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை குறித்த செய்தி குறிப்பு இணைந்திருங்கள் உங்கள் TNNEWS24 உடன்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*