Connect with us

#24 Exclusive

வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன் முதல் சம்பவம் !

தெலுங்கானா என்கவுண்டர் விவகாரத்தில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யபட்டது சரியில்லை என்று பேசிய திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியை நேரடியாக வெளுத்து வாங்கியிருக்கிறார், பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து அவர் கூறியதாவது :-

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. காமுகர்களுக்கு மரண தண்டனை, அதுவும் உடனடி தண்டனை வழங்கவேண்டுமென்று பெண்களிடமிருந்து பலத்த அறை கூவல்
பாராளுமன்றமே கொந்தளித்தது. அந்த நான்கு கயவர்களும் தப்பி ஓட முயல்கையில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அவர்கள் சாதாரண சிவில் குற்றவாளிகள் அல்ல. கொடூரமான காமுகர்கள். அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த முயலும்
முயற்சியில் வேறு வழியின்றி என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். இது குறித்து போலி அனுதாபங்கள் தேவையில்லை.

Loading...

ஆனால் விசித்திரமாக நாடாளுமன்ற தி முக
பெண் உறுப்பினர், கனி மொழி, அவர்கள்
இதனை பெண் என்ற முறையில் வரவேற்காது இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது
கேலிக்குரியதாய் உள்ளது. என்கவுண்டர் என்பதே வேறு வழியில்லா நிலையில் கடுங்குற்றவாளி களுக்கு எதிராய்ச் செயற்படுத்துவது. சட்டம் விரைந்து செய்திருக்க வேண்டிய கடமையை என்கவுண்ட்டர் கச்சிதமாய் முடித்துள்ளது.

Loading...

பாராட்டுங்கள்.இல்லையென்றால் ஒதுங்கி நில்லுங்கள். மாறாக கொச்சையாய் விமர்சிப்பது எந்நிலையிலும் ஏற்புடைத்தல்ல. தேவைப்பட்டால் என்கவுண்ட்டரைக் கூட
சட்ட ரீதியாக்குங்கள்.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது நாகரீகமல்ல. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கனிமொழியின் கருத்திற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில போலீசார் பாலியல் பலாத்கார குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது சரி என்று 90 % மக்களுக்கு மேல் பொதுவெளியில் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரனும் இருக்கும் நிலையில் திமுகவின் கனிமொழிக்கு எதிராக வலுவான கண்டனங்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் மனநிலையில் இருந்து பேசியிருப்பது பாஜகவினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending