உயிருக்கு மேலானதில் கைவைத்துவிட்டீர்கள்,,! பற்றி எறிய தொடங்கியது தீ…நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை

உயிருக்கு மேலானதில் கைவைத்துவிட்டீர்கள்,, நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை ! பற்றி எறிய தொடங்கியது தீ

Loading...

தமிழகத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய ஊடகத்தில் பணியாற்றும் சிலரே இந்து மதம் கடவுள்களை கொச்சை படுத்தும் செயலில் இறங்கியிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது, இந்து கடவுள்களின் புராணங்களை யூடுப் வழியாக மிகவும் கொச்சை படுத்தும் செயலில் சிலர் ஈடுபட்டு இருப்பதை மாரிதாஸ் ஆவணப்படுத்தி இருந்தார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூடுப் தளம் மூலம் இந்து கடவுள்கள் முருகன் தொடங்கி பெண் கடவுள்கள் சரஸ்வதி வரை மிகவும் அருவருக்க தக்க வகையில் காட்சி படுத்தியிருந்தனர், இந்த செயலில் ஈடுபட்ட நபர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்ட வீடியோக்கள் வெளியாகி இந்து மதத்தை சேர்ந்தவர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Loading...

இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் சமூகவலைத்தள பக்கத்தில் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார், அவர் பதிவிட்ட தகவல் பின்வருமாறு :- தமிழ் சமுதாயம் உயிரினும் மேலாக வணங்கும் தெய்வங்களை , தொடர்ந்து இழிவு படுத்தும் வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர் !! தமிழக மக்களின் ஆதங்கம் , கோபமாக மாறி , அந்த கோபம் கனலாக கொதித்து இக்கயவர்களை சுட்டெரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை 🔥வெற்றிவேல் வீரவேல் !! என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பலரும் கருப்பர் கூட்டம் சேனலுக்கும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யும் நடைமுறையில் இறங்கியுள்ளனர், பாஜகவை சேர்ந்த அஸ்வத்தாமன் காவல்துறையில் புகார் அளித்ததுடன் கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் கைது செய்யப்படவில்லை என்றால் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவோர்களுக்கு எதிராக பற்றி எறிய தொடங்கியுள்ளது தீ..

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*