Connect with us

#24 Exclusive

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி: நடிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக வரும் 23ம் தேதி நடத்த இருக்கும் பேரணியில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று காலை முரசொலியில் வெளிவந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஒரு கூட்டத்தைக் கூட்டினால் அதில் திமுகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமே இடம்பெறுவது வழக்கமான ஒன்று. அதே போல் அனைத்து கட்சிகள், நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு திமுக இந்த பேரணிக்கு ஆதரவு தர அழைப்பு விடுத்திருந்த போதிலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமே இந்த பேரணியில் கலந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது

திமுகவின் பேரணிக்கு முதலில் ஆதரவு தந்து விட்டு பின்னர் திடீரென மறுப்பு தெரிவித்தார் கமலஹாசன். இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத திமுகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக நடிகர் சங்கமும் இந்த பேரணியில் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது

Loading...

நடிகர் சங்கம் தற்போது தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நாசர் மற்றும் விஷாலிடம் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் ஆனால் அவ்வாறு எந்த அழைப்பும் இல்லாததால் நடிகர் சங்கம் இந்த பேரணியில் கலந்து கொள்ளாது என்றும் நடிகர் கருணாஸ் சற்று முன்னர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இருப்பினும் சொந்த விருப்பத்தின் பேரில் சித்தார்த் உள்பட ஒரு சில நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட மாட்டாது என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்

Loading...

இப்பொழுது வரை திமுகவின் பேரணிக்கு கூட்டணி கட்சிகள் தவிர நடிகர் சங்கம் உள்பட எந்த அமைப்புகளும் ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

Trending