முஸ்லிம்களே வாக்களிப்பது வாக்களிக்காதது உங்கள் விருப்பம் ஆனால் இதை மறந்துவிடுங்கள் ராஜ்நாத் !!

டெல்லி சட்டமன்ற தேர்தல் வருகிற பிப்ரவரி 8 ம் தேதி நடைபெற இருக்கிறது, இதற்காக ஆளும் ஆம் ஆத்மீ, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது அதில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

Loading...

அப்போது அவர் என்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா, இல்லையா என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். ஆனால் எங்களது நோக்கங்களை சந்தேகிக்க வேண்டாம் உங்களது குடியுரிமையை பறிப்பதாக பரவும் செய்திகளை மறந்து விடுங்கள் என்றும் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், மேலும் முஸ்லிம்களை நாடுகடத்த போவதாக பல்வேறு வதந்திகள் திட்டமிட்டு பரப்ப படுகிறது, தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் கூட முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப போகிறார்களாம் என பேசிய வீடியோ வைரலானது.

Loading...

எனவே இந்தியர்கள் யாருக்கும் இந்த சட்டத்தின் மூலம் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2638 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*