Connect with us

#24 Exclusive

விஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல நடிகை யார்?

Published

on

விஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல நடிகை யார்?

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையிட்டு சிக்கிய பிரபல திருடன் முருகன் மற்றும் அவனது மருமகன் சுரேஷ் ஆகியோரை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளன. குறிப்பாக நகைகளை திருடியதே சினிமா படம் எடுக்கவும், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்கவும் தான் என்று சுரேஷ் தெரிவித்த தகவலால் தற்போது பரபரப்பு அதிகரித்துள்ளது.

போலீஸ் விசாரணையில் சுரேஷ் தெரிவித்த கருத்து :-

எனது மாமா முருகன் என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்க திட்டமிட்டார். அதன்படி, 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க தொடங்கினோம். 45 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்று விட்டது.

அதன்பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி தொகையை கொடுக்க முடியாமல் போனதால், அந்த நடிகை ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால், முழுவதுமாக படம் எடுத்து முடிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சினை எழுந்ததால், மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

அதன்படி, திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளை போட்டு நகைகள், பணத்தை மாமா முருகன் திட்டபடி கொள்ளையடித்தோம். பின்னர், மீண்டும் படம் எடுப்பதற்காக தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்து பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும், மாமா முருகனும் சந்தித்தோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் பிசியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறோம் என்றோம். அவரும் ஆர்வமாக அப்படியா? என்றார். பின்னர் மாமா, வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார்.பின்னர் அவரை தொடர்புகொள்ள நாங்கள் முயற்சிக்கவில்லை.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

போலீஸ் காவலில் உள்ள சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டாலும், முருகன் கொடுத்த நகைகளை பரிசாக பெற்ற அந்த பிரபல நடிகையிடம் தனிப்படை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். விஜய், சிவகார்த்திகேயன் உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் தமிழில் இந்த வாரிசு நடிகை நடித்துள்ளார். மேலும் சுரேஷ் கும்பலுடன் உல்லாசமாக தொடர்பில் இருந்த தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் குறித்தும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கொள்ளையன் முருகன், சுரேஷ் உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் உள்ள நடிகைகள் கிலியில் உள்ளனர். நடிகைகளிடம் விசாரித்தால்தான் கொள்ளையன் சுரேஷ் சொன்னது உண்மையா? என தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாரிசு நடிகை விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்து தற்போது முன்னணி நாயகியாக தமிழ் சினிமாவில் வளம் வருவது குறிப்பிடத்தக்கது.

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com