Connect with us

#24 Exclusive

பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த முகிலன் பிடிபட்டார் சுற்றிவளைத்து கைது செய்தது காவல் துறை ! (வீடியோ )

சமூக செயல்பாட்டாளர் என்று அறியப்படும் முகிலன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார் அவரை யாரோ கடத்திவிட்டதாகவும் முகிலனை மீட்டு தரக்கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து முகிலனை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் காவல் துறையினரே முகிலனை கடத்திவிட்டதாக அவதூறுகளை பரப்பினர்.

ஆனால் முகிலனின் பள்ளி தோழர் ஒருவர் அவரை ஆந்திர மாநிலம் திருப்பதியில் பார்த்ததாக காவல் துறையில் தகவல் அளித்தார்.

Loading...

அதை தொடர்ந்து அங்கு சென்ற ஆந்திர காவல் துறையினர் முகிலனை கைது செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக விடீயோக்கள் வெளியாகியுள்ளன.

Loading...

இப்பொது அங்கு தமிழக காவல் துறையினர் விரைந்துள்ளனர். இதற்கிடையில் பெண்கள் இருவர் முகிலன் மீது பாலியல் புகார் கொடுத்திருந்த நிலையில் அதுகுறித்த வழக்கிலும் முகிலனை காவல்துறையினர் தேடிவந்தனர்.

தற்போது முகிலன் சிக்கிய நிலையில் இனி பல தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. முகிலன் மீதான பாலியல் புகார்கள் இனி வேகம் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending