8 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட முபீனா, CAA எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அதிர்ச்சி !

8 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட   முபீனா,  CAA எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அதிர்ச்சி !

கோவை மாவட்டத்தில் முபீனா என்ற பெண்ணை 8 கிலோ கஞ்சாவுடன் கவகத்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் இவர் சமீபத்தில் CAA விற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக போராடியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் இரத்தினபுரி கண்ணப்பன் நகரில் 7 வது தெருவில் வசித்து வருபவர் முபீனா கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தனது கணவன் வேறு திருமணம் செய்து கொண்டதால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்,

இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கோவையில் கஞ்சாவை மொத்த வியாபாரிகளிடம் இருந்து பெற்று தன்னுடைய வீட்டில் பதுக்கி வைத்திருந்து, புர்காவில் மறைத்து சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Loading...

புர்காவை காவல்துறையினர் சோதனை செய்யமாட்டார்கள் என்பதால் அவர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார், இது குறித்த ரகசிய தகவல் ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணிக்கு கசிந்துள்ளது.

Loading...

எனவே, இந்த தகவலின் பேரில் விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணின் வீட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்பொழுது அங்கே 8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். .

பிடிபட்ட முபீனாவிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை உண்டாக்கியது, முபீனா தனது மகன்களுடன் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

CAA எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கஞ்சாவை வீட்டில் வைத்து கையும் களவுமாக பிடிபட்டு இருப்பது, Caa எதிர்ப்பு போராளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *