இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று ஊடகங்கள் மற்றும் விமர்ச்சகர்கள் கருத்து சொல்லிவந்த நிலையில், தோனி ஓய்வு முடிவு குறித்து எதுவும் அறிவிக்காமல் இரண்டு மாதம் இந்திய இராணுவத்தில் இணைந்து பணியாற்ற போவதாக அறிவித்து காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தோனி இராணுவத்தினருடன் இணைந்து காஷ்மீர் பகுதியில் பணியாற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவந்தது, இந்நிலையில் மேற்கு இந்திய அணிக்கு எதிரான குழுவில் தோனி இராணுவத்தில் பணியாற்ற இருப்பதால் ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
Loading...
ஆனால் தற்போது தென்னாபிரிக்கா அணியுடன் மோதும் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது, ஓய்வு முடிவினை தற்போது வரை தோனி அறிவிக்காத நிலையில் அவரை அணியில் ஏன் தேர்வு குழு தேர்வு செய்யவில்லை என்று கடும் விவாதங்கள் தற்போது வரை சமூகவலைத்தளங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த முறை உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வு பெறமாட்டார் என்றும் இந்திய இராணுவத்தில் இணைந்து தோனி நாட்டிற்காக பணியாற்றுவார் என்று தனியார் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது, அதனை போலவே தற்போதுவரை தோனி இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
அமெரிக்காவில் கோல்ப் விளையாடும் தோனி , கேதார் ஜாதவ்
இந்த நிலையில் அதே பிரபல இணையதளம் தோனியின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது, அது குறிப்பிட்ட செய்தியானது, இந்திய அணியில் தோனி இடம்பெறாத தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் தோனிக்கு முன்பே தெரியும், மேலும் அவர் அமெரிக்காவில் தற்போது கோல்ப் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் தோனியின் வாழ்வின் அடுத்த கட்டம் குறித்த மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறது, ஆம் இனி தோனி தீவிர அரசியலில் இறங்கவுள்ளார், விரைவில் ஜார்கன்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் தோனி களமிறங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது, மேலும் அவரது பார்வை தேசிய கட்சியின் பின்னணியில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முன்பே தோனியின் நகர்வுகளை இந்த இணையதளம் சரியாக கணித்து கூறியிருந்தால் தற்போது
Dhoni latest look
இந்த தகவல் வெளியானதில் இருந்து தோனியின் ரசிகர்கள் தற்போதே சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். உலககோப்பைக்கு பின்னர் தோனி பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக அனைத்து ஊடகங்களும் சொல்லிவந்த நிலையில் அது விரைவில் சாத்தியமாகுமா என்ற எதிர்பார்ப்பு பாஜகவினர் இடையேயும் எழுந்துள்ளது.
எது எப்படியோ தோனி அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தோனி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் மட்டும் தெளிவாகியுள்ளது.