பாஜகவில் அதிகார பூர்வமாக இணைகிறார் தோனி தந்தி டிவி யின் கணிப்பு உண்மையாகிறது.

Loading...

ஜார்கன்ட்.,

கடந்த லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 11ல் பா.ஜ. வெற்றி பெற்றது. ஆனால் வர இருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என பா.ஜ.க தரப்பு நினைக்கிறது. ஆளும் பா.ஜ. அரசு மீது அதிருப்தியும், பழங்குடியினர் மத்தியில் வெறுப்பும் காணப்படுகிறது. இதையெல்லாம் பாஜக  சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

Loading...

ஏற்கனவே பாரதீய ஜனதாவில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கிழக்கு டில்லியில் இருந்து எம்.பி.யாகி விட்டார். அதே பாணியில் டோனியையும் கொண்டு வரும் வேலைகளை பாஜக  செய்ய துவங்கி விட்டது. டில்லி பா.ஜ. எம்.பி.யான மனோஜ் திவாரி, டோனிக்கு நெருக்கமானவர். 

கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கூட, டோனியை ஒரு முறை அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது இருந்தே, பாஜக வில் டோனி சேருவார் என்ற பேச்சு அடிபடத் துவங்கியது. ஏற்கனவே இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மூத்த நிர்வாகிகளிடம், உலக கோப்பை முடியும் வரை பொறுத்திருக்குமாறு டோனி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

கட்சியில் சேர்ந்த பிறகு ஜார்க்கண்டில் என்ன மாதிரியான வேலைகளை டோனிக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்படும். அம்மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் குறைந்தது 65 தொகுதிகளிலாவது ஜெயிக்க வேண்டும் என்று பா.ஜ. விரும்புகிறது. இதில் ஒரு திட்டம் தான் டோனியை கட்சியில் சேர்ப்பது.

இவ்வாறான செய்தியை தந்தி டிவி உள்ளிட்ட தமிழ் ஊடகங்கள் கடந்த இரண்டு தினங்களாக சொல்லி வந்தன அவற்றிற்கு வலுசேர்க்கும் விதமாக தோனியின் நெருங்கிய நண்பரும் ஜார்கண்ட் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் தோனியின் வருகை இனி ஜார்கன்ட் மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தேசியத்தின் மீதும், தேசபாதுகாப்பின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் தோனி அவரது அரசியல் ஆட்டம் இனி தொடங்கும் என்று தனிப்பட்ட முறையில் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த தகவல் தற்போது பாஜக தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது விரைவில் தோனி ஜார்கன்ட் மாநில அரசியலில் இறங்கும் பட்சத்தில் அது நிச்சயம் அவருக்கும் பாஜகவிற்கும் வெற்றியை தேடித்தரும் என்றே அரசியல் விமர்ச்சகர்களும் கருதுகின்றனர். எது எப்படியோ தோனியின் வருகை நிச்சயம் பாஜக தொண்டர்களை மேலும் உற்சாகமடைய செய்யும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு உலகக்கோப்பை போட்டிகள் நிறைவடைந்ததும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தோனியின் 2.0 இனி பாஜகவில் தொடங்குகிறதா??

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2698 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*