Connect with us

Uncategorized

ரவீந்திரநாத் குமார் வாகனம் மீது தாக்குதல் பதிலடி கொடுக்கப்பட்டது !

கம்பம் : – முன்னாள் முதல்வர் M G R பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிற்று திரும்பிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் O.p. ரவீந்திரநாத் வாகனத்தை முற்றுகையிட்ட சில இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் அவருடைய வாகனத்தை தாக்கிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்திரநாத் குமார் வாகனம் மட்டுமல்லாமல் அவரை அழைக்க உடன் சென்ற பாஜக நிர்வாகி ராஜா பிரபு வாகனமும் கற்களை வீசி தாக்கப்பட்டுள்ளது, ரவீந்திரநாத் CAA சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் அவரது வாகனம் தாக்க பட்டதாக கூறினாலும், இதற்கு முன்னர் எந்த அதிமுகவை சேர்ந்த எந்த அரசியல்வாதியும் கூறாத வகையில் இந்துமுன்னணி ஏற்பாடு செய்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், காவி துண்டுடன் களம் இறங்கினார்.

அத்துடன் இந்தியா இந்துக்கள் நாடு எனவும் தெரிவித்தார், தொடர்ந்து அதிமுகவில் இருந்தாலும் இந்து அமைப்புகள் விழாவில் பங்கேற்று தேனி பகுதிகளில் இந்து அமைப்புகள் வளர்ச்சிக்கும் நேரடியாக விழாக்களிலும் பங்கேற்றார், குறிப்பாக பல ஆண்டுகளாக கம்பம் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடாத நிலையில் இந்த ஆண்டு அவரின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டது.

Loading...

இதையெல்லாம் மனதில் வைத்தே இதுபோன்ற தாக்குதல்கள் அரங்கேறியிருக்கலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர், தொடர்ந்து இந்து மதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் ரவீந்திரநாத் குமாருக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Loading...

சொந்த மண்ணின் மைந்தனான ரவீந்திரநாத் குமார் வாகனம் தாக்கப்பட்டிருப்பதும், அதே நேரத்தில் தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்தோர் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதும் மேற்கு வங்கம் போன்று தமிழகமும் மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...

Trending