Connect with us

Crime

கணவன் மனைவிக்குள் சண்டை – ஒரு வயது குழந்தையை தூக்கில் ஏற்றிய தாய் !

கணவன் மனைவிக்குள் சண்டை – ஒரு வயது குழந்தையை தூக்கில் ஏற்றிய தாய் !

திருப்பூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஒரு வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த தாய் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மனைவி துர்கா தேவி மற்றும் ஒரு வயது மகன் ரித்திக் ஆகியோடு அவிநாசியை அடுத்துள்ள பெரியாயிபாளையம் என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கணவன் மனைவிக்கு சண்டை நடந்துள்ளது.

Loading...

இதையடுத்து கோபமாக பிரபாகரன் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் போனதில் இருந்து துர்கா தேவி வெளியே வரவே இல்லை. மாலைவரை வீடு சாத்தியிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது துர்கா தேவியும் அவரது மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

Loading...

இதையடுத்து போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். அப்போது முதலில் மகனை தூக்கில் ஏற்றிக் கொன்றுவிட்டு தானும் தூக்கில் தொங்கியிருக்கலாம என போலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending