Connect with us

முகப்பு

குழந்தையை கொடூரமாகக் கொன்ற தாய் – பதறவைக்கும் காரணம் !

குழந்தையை கொடூரமாகக் கொன்ற தாய் – பதறவைக்கும் காரணம் !

கேரளாவில் குழந்தையைக் கொலை செய்து விட்டு காணவில்லை என நாடகம் ஆடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலத்தில் உள்ள கண்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் பிரனவ். இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்றொரு மகன் உள்ளார். சில தினங்களுக்கு நள்ளிரவில் இருந்து தங்கள் குழந்தையைக் காணவில்லை என தம்பதிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Loading...

அடுத்த நாள் குழந்தையின் சடலம் சரண்யாவின் வீட்டுக்கு அருகே உள்ள கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இது சம்மந்தமாக நடந்த விசாரணையில் குழந்தையின் சரண்யா முன்னுக்குப் பின் முரனான பதிலை சொல்லியுள்ளார். அதனால் அவரது போர்வையில் கடல் மண் அல்லது உப்பு ஏதாவது படிந்திருக்கிறதா என சோதனை செய்ய போலீஸார் அதைக் கேட்டுள்ளனர். இதில் பீதியடைந்த சரண்யா குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

Loading...

ஆனால் கொலைக்காக அவர் சொன்ன காரணம்தான் எல்லோரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது ‘கொலை நடந்த அன்று குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். ஆனாலும் குழந்தை அழுகையை நிறுத்தாததால் ஆத்திரத்தில் பாறையில் மோதி கடலில் வீசிவிட்டேன். குழந்தை இறந்ததை உறுதி செய்தி கொண்ட பின் வீட்டுக்கு வந்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending