மின்விளக்குகளை அனைத்துவிட்டு அகல்விளக்குகளை ஏற்றுங்கள் – வேண்டுகோள் வைத்த மோடி!

India's Prime Minister Narendra Modi leaves from 10 Downing Street in central London on April 18, 2018, after attending a bilateral meeting with Britain's Prime Minister Theresa May on the sidelines of the Commonwealth Heads of Government meeting (CHOGM). / AFP PHOTO / Tolga AKMEN

மின்விளக்குகளை அனைத்துவிட்டு அகல்விளக்குகளை ஏற்றுங்கள் – வேண்டுகோள் வைத்த மோடி!

Loading...

மக்களிடம் வீடியோ மூலம் பேசிய மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அகல்விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் பாதிக்கபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது வருகிறது. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்க இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அறிவித்ததில் இருந்து சில முறை மோடி மக்களோடு தொலைக்காட்சியில் பேசினார்.

Loading...

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மோடி மீண்டும் நான்காவது முறையாக மக்களிடம் உரையாட இருக்கிறார் என்ற அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நாளை காலை 9 மணிக்கு… ஒரு சிறிய வீடியோ மூலம் இந்திய மக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். அதனால் இன்று காலை 9 மணிக்கு ஆர்வமாக தொலைக்காட்சி முன்னர் அமர்ந்தனர்.

இந்நிலையில் மோடியின் பேச்சில் ‘ஊரடங்கால் நாம் தனியாக இருந்தாலும் நம்மோடு 130 கோடி இந்தியர்களும் உள்ளனர். நமது ஊரடங்கு முறையை இப்போது உலகமே பின் பற்றுகிறது. ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள், செல்போன் டார்ச் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  9 நிமிடம் இதுபோல செய்து நமக்காக உழைக்கும் மருத்துவர்களை மற்றும் சக மக்களை நினைத்துப் பார்க்கவேண்டும். கொரோனா ஏற்படுத்திய இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வருமாறு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*