மறைந்த முதல்வர் மனோகர் பாரிகருக்கு மோடி அளித்த கவுரவம், இனி வரலாறு பேசும் !!

மறைந்த கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் 2017, மார்ச் 14-ம் தேதி வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். பாரிக்கர் அமைச்சராக இருந்தபோதுதான் பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் போன்றவற்றுக்கு துணிச்சலுடன் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. கோவாவில் பாஜக ஆட்சியைப் பிடித்த பின் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வராகப் மீண்டும் பதவி ஏற்றார். ஆனால், அடுத்த ஓராண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Loading...

இந்நிலையில் மறைந்த தலைவர் மனோகர் பாரிகருக்கு மோடி உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்றும் என்றென்றும் அவரது பெயர் நிலைத்து நிற்கவேண்டும் என்றும் அதற்காக இராணுவத்துறையில் அவரது பெயர் இடம்பெற வேண்டும் என்று விரும்பினார்.

அதனையடுத்து டெல்லியில் உள்ள ராணுவத்துக்குக் கட்டுப்பட்ட பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தை (ஐடிஎஸ்ஏ), “மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் டிஃபென்ஸ் ஸ்டடிஸ் அண்ட் அனாலிசிஸ்” எனப் பெயர் மாற்றி மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை உயிருடன் இருக்கும் தலைவர்கள் தங்கள் பெயரில் திட்டங்களை அறிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

இதற்கு முன்னர் மறைந்த மற்றொரு மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் புகழை போற்றும் விதமாக வெளியுறவுத்துறையில் ஒரு பிரிவிற்க்கு சுஸ்மா சுவராஜ் பெயர் சூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*