Connect with us

Uncategorized

இனி தீவிரவாத நடவடிக்கை அல்லது ஆதரவாக இருந்தால் என்ன தண்டனை தெரியுமா மத்திய அரசின் அடுத்த நகர்வு ! இதுதான் சரியான தண்டனை வரவேற்கும் இந்தியர்கள் !!

Published

on

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று இன்றுவரை எதிர் கட்சிகள் மற்றும் இன்னும் பிற இயக்கங்கள் போராடி வரும் நிலையில் மத்திய அரசு இந்தியாவை முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரவும், உள்நாட்டு தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை முழுவதும் ஒழிக்கவும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்டது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முந்தைய கூட்டத்தொடரில் உள்துறை அமைச்சர் அமிட்ஷா இரண்டு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்தார் அதில் மிகவும் முக்கியமானது, இனி இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபடும் தனி நபர்களையும் தீவிரவாத இயக்கமாக கருதி நடவடிக்கை எடுப்பது மற்றொரு NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பது.

இதன் தொடக்கமாக இந்தியாவில் சில அரசியல் இயக்கங்களை சேர்ந்தவர்களே தீவிரவாத இயக்கத்தை வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவதும், குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை சென்று பார்வையிட்டு ஆதரவு தெரிவித்து புகைப்படம் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.

Loading...

இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், அவர்களுக்கு பொது வெளியில் ஆதரவு கரம் நீட்டுபவர்கள் ஆகியோரின் வாக்குரிமையை ரத்து செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Loading...

வாக்குரிமை ரத்து செய்யப்பட்டால், தேர்தலில் போட்டியிட முடியாது, அதே நேரத்தில் வெற்றிபெற்று எம் எல் ஏ அல்லது எம் பி யாக இருப்பவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்தால் அவர்களது வாக்குரிமை ரத்து செய்யப்படுவதுடன் தேர்தலில் போட்டியிடவும் தடை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது, இவ்வாறு தடை விதிக்கப்படுபவர்கள் தங்கள் மீதான குற்றத்தை தவறு என நிரூபிக்க 3 ஆண்டுகள் வரை வாய்ப்புகள் அளிக்கப்படும் வகையில் சட்ட திருத்தம் வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவை மூலம் அரசியலுக்காக தீவிரவாதத்தை கையில் எடுப்பதும், தவறான பொய் பிரச்சாரங்களை கூறி மக்களை திசை திருப்புவது உள்ளிட்ட செயல்கள் குறையும் என மத்திய அரசு நினைக்கிறது, அதே நேரத்தில் இனி வெளிப்படையாக இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டோரை ஆதரிப்பது நடக்காது எனவும் கூறப்படுகிறது சமீபத்தில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகதில் நடைபெற்ற போராட்டங்கள் மூலம் ஊடக புகழ் பெற்ற இரண்டு இஸ்லாமிய பெண்களும் வெளிப்படையாக தீவிரவாதி யாகூப் மேனனுக்கு சமூகவலைத்தளத்தில் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த முடிவு சட்டமாக நடைமுறைக்கு வரும்போது நிச்சயம் சில ஊடகவியலாளர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending