வங்கியில் 4 லட்சம் பணம் இரண்டு வருடங்களுக்கு மாதம் 5000 மத்திய அரசு அறிவிப்பு 120 ஆண்டுகால வரலாற்று பிரச்சனைக்கு தீர்வு !!

120 ஆண்டுகளாக நடைபெற்ற Bru-Reang பழங்குடிகள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது, bru எனும் பழங்குடி மக்கள் இந்தியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே வாழ்கிறார்கள்.

Loading...

இந்தியாவில் மிசோரம், திரிபுரா மற்றும் தெற்கு அஸ்ஸாமில் மிகச்சில பகுதிகள் என்று ப்ரு மக்கள் வாழ்கிறார்கள். 1997-ல் மிசோரம் மாநிலத்தின் பூர்வ குடிகளான மிசோ மக்களுக்கும், ப்ரு மக்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் ..32,000 ப்ரு மக்கள் திரிபுராவிற்கு இடம்பெயர்ந்து அகதிகள் முகாம்களில் வாழ்ந்தனர்.
தொடர்ந்து தங்களுக்கான பழங்குடி மக்களுக்கான தனி இடம் கேட்டு போராடி வந்தனர்.

கடந்த 20 வருடங்களில்….இப் பிரச்சினை குறித்து 2010 முதல் 8 முறை பேச்சுவார்த்தை நடந்து தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்தது. இந்த பின்புலத்தில் …மிசோரம் & திரிபுரா மாநில அரசுகள் , பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி..இப் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு கண்டிருக்கிறது மத்திய மோடி அரசு.

Loading...

இதன்படி…திரிபுராவில் ..ஒவ்வொரு ப்ரு குடும்பத்திற்கும் 40 x 30 சதுர அடியில் இலவச வீட்டு மனை, வீடு கட்டிக் கொள்வதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய், இரண்டு வருடங்களுக்கு இலவச ரேஷன், வங்கியில் 4 லட்சம் ரூபாய் வைப்பு தொகை, இரண்டு வருடங்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.

இதன் மூலம் 23 வருட காலம் கழித்து அகதிகளாக இருந்த ப்ரு பழங்குடி மக்களின் பிரச்சினை நிரந்தரமாக தீர்த்து வைக்கப் பட்டிருக்கிறது !
ஒவ்வொரு மாநிலத்தின் அகதிகள் பிரச்சினையும்…அதற்குரிய தனி கவனத்துடன் அணுகி..மத்திய அரசால் தனித்தனியாக தீர்த்துவைக்கப்படுகிறது.
(:- பானு கோம்ஸ் )

ப்ரு பழங்குடியின மக்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, காஷ்மீரில் இந்துக்கள் தொடர் கொலை செய்யப்பட்டபோது வேறுவழியின்றி காஷ்மீரின் பூர்வகுடி மக்கள் வெளியேறினார்களோ அதே போல் இவர்கள் வெளியேறினர்.என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3916 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*