இதுதான் சரியான நேரம் காத்திருந்து புதிய சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு, நீண்ட நாள் கனவு நிறைவேறியது !!

மத்திய மோடி அரசின் கனவு திட்டங்களில் பல முக்கிய சட்டங்கள் இருந்தன, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்குதல், குடியுரிமை சட்டம், பொது சிவில் சட்டம், ராமர் கோவில் கட்டுவது உள்ளிட்ட முக்கிய பல கனவு திட்டங்களை வைத்திருந்தது. அதில் 50 சதவீதத்திற்கு மேலான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது.

Loading...

ஆனால் பொது வெளியில் அதிகம் பேசப்படாத திட்டங்களில் ஒன்றுதான் MP MLA களின் ஊதியத்தை குறைப்பது மற்றும் பயனபடியை 70% குறைப்பது என்பது, ஒரு உதாரணம் மூலம் இந்த சட்டத்தின் தேவை எவ்வளவு முக்கியம் என தெரிந்து கொள்ளலாம், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால் வெளியில் மிகவும் எளிமையானவர்கள், செலவு செய்யாதவர்கள் என்ற பிம்பத்தை தமிழக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ளன.

D RAJA என்ற தமிழகத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை எம் பி ஒரு வருடத்தில் (2016-2017) ஆண்டில் மட்டும் விமான பயணத்திற்கு செலவு செய்தது 65 லட்சம் ரூபாய் இது ஆர் டி ஐ தகவலில் தெரியவந்தது, அதாவது 3000 மதிப்புள்ள சாதாரண டிக்கெட்டில் இவர் பயணம் செய்ததே இல்லை, 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை ஆகும் பிசினஸ் டிக்கெட்டில்தான் அதிகம் பயணம் மேற்கொண்டார்.

Loading...

இவருடைய விமான பயண செலவிற்கு மட்டும் அரசு ஆண்டிற்கு 65 லட்சம் பயனபடியை செலுத்தியது, இது போன்ற அனைத்து தகவலும் பிரதமர் மோடி வசம் சென்றபோது பாராளுமன்றத்தில் 79% நபர்கள் கோடீஸ்வரர்கள் என்றும் இவர்களுக்கு பயணப்படி தேவையில்லை எனவும் சிறப்பு குழு பிரதமரிடம் வலியுறுத்தியது.

இதற்கான நேரம் பார்த்து கொண்டிருந்த மத்திய அரசு தற்போது கொரோனா பாதிப்பால் உண்டான செலவினங்களை குறைக்கும் விதமாக MP களின் சம்பளத்தை 30 சதவிகிதம் குறைத்தும் பயணப்படி, மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி என அனைத்தையும் தள்ளுபடி செய்து சட்டம் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் பெரும் தொகை மிச்சமாக்கப்பட்டுள்ளது, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதம் சம்பளம் ஒரு லட்சமாக மீண்டும் உயரும் எனவும் அதே நேரத்தில் அவர்களுக்கான இதர செலவுகள் முழுமையாக 70% அளவு குறைக்கப்படும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் பிரதமர் மோடியின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறியது மட்டுமல்லாமல் வீண் செலவுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பிரபல பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான பிரகாஷ் குப்தே கூறும்போது மத்திய அரசு எடுத்த முடிவுகளில் மிக பெரிய சம்பவம் இது என கூறலாம் பெரும்பாலான எம் பி கள் கோடிஸ்வரர்கள் அப்படி இருக்கையில் அரசின் மீதே தங்கள் செலவுகளை சுமத்துகிறார்கள், மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கை நிச்சயம் பெரும் பலனை தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*