Connect with us

சமுகவலைத்தளம்

மோடி வெளிநாட்டு பயணத்தை கிண்டல் செய்தவர்கள் கவனத்திற்கு இன்று தெரிகிறதா அதன் அருமை?

மோடி வெளிநாட்டு பயணத்தை கிண்டல் செய்தவர்கள் கவனத்திற்கு இன்று தெரிகிறதா அதன் அருமை?

இந்திய பிரதமர் மோடி ஒவ்வொருமுறை வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போதும், ஏதேனும் ஒரு வகையில் நிதி ஆதரங்களை திரட்டுதல், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை புதுப்பித்தல், தொழிநுட்பத்தை பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை இந்தியாவிற்கு சாதகமாக பெற்று வந்திருக்கிறார் என்று பாஜகவினரும், சில பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்ச்சகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனால் இதை தமிழகத்தை சேர்ந்த பலரும் மோடியின் வெளிநாட்டு பயணத்தை கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் சமூக ஆர்வலரும், அரசியல் விமர்ச்சகருமான பானு கோம்ஸ் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை முன்வைத்து மோடியின் வெளிநாட்டு பயணத்தின் சிறப்பை விளக்கியுள்ளார்.

Loading...

2017-ல் இந்திய பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்ற போது ..அந்த நாட்டின் பிரதமர் நெதென்யாஹு … இருவரும் இணைந்து அங்குள்ள கடற்கரைக்கு சென்று வந்த போட்டோக்கள் வெளியானது. அதை வைத்து ..இந்திய எதிர்க்கட்சியினர் வழக்கம் போல..கிண்டலடித்து மகிழ்ந்தனர்.

Loading...

ஆனால்.. GALMOBILE என்கிற கடல்நீர் உட்பட எந்த நீரையும் குடிநீராக மாற்றுகிற ஜீப் குறித்து பார்வையிடவே இருவரும் கடற்கரைக்கு சென்றனர்.

சமீபத்தில்..இந்தியாவிற்கு வந்த நெதென்யாஹு..இந்த ஜீப்பை தான் தன்னுடைய நண்பர் மோடிக்கு பரிசளித்ததாக செய்திகள் உண்டு. இந்திய பிரதமர் மோடியின் எந்த ஒரு அந்நிய நாட்டு பயணமும் வீணானது அல்ல. சுயபெருமைக்கானதும் அல்ல !

அறிவியல் கண்டுபிடிப்புகளில் எப்போதுமே முன்னணியில் இருக்கும் இஸ்ரேலின் கண்டுபிடிப்பான இந்த GALMOBILE Jeep- ன் சிறப்பம்சங்கள் :

 1. கடல், ஆறு, குளம், ஏரி, குட்டை, கால்வாய், கிணறு, என்று எந்த நீர்நிலையிலிருக்கும் நீரையும் World Health Organisation பரிந்துரைத்துள்ள அளவின்படியான குடிநீராக மாற்றும் திறனுள்ளது.
 1. இதன் எடை 1540 கிலோ.
 2. இயங்குவதற்கு தேவையான மின்சக்தியை தன்னுள்ளேயே கொண்டது.
 3. முழுவதுமான தானியங்கி . யாரும் அருகிருந்து இயக்க தேவையில்லை.
 4. எளிதாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லும் அளவிற்கு இலகுவானது.
 5. எந்த நீர் நிலையிலிருந்து நீர் தேவைப்படுகிறதோ..அங்கு இந்த ஜீப்பை இரண்டு மனிதர்கள் 30 நிமிடத்தில் நிலைநிறுத்திவிட முடியும்.
 6. இந்த ஜீப்பிலேயே சுத்திகரிக்கும் தண்ணீரை சேகரிக்கும் நீர் தொட்டி இருக்கிறது. இதன் குறைந்த பட்ச கொள்ளளவு 1000 லிட்டர். அதிக பட்ச கொள்ளளவு 10,000 லிட்டர் !
 7. சுத்திகரிக்கும் நீர் ஜீப்பில் உள்ள நீர் தொட்டியின் கொள்ளளவை எட்டியவுடன் ..தானியங்கி முறையில் தானாகவே இயக்கம்
  நின்றுவிடும். அதன் பிறகு..அந்த ஜீப்பிலேயே நீரை எடுத்து சென்று தேவைப் படும் பகுதிகளுக்கு விநியோகிக்க முடியும்.
 8. இந்த ஜீப்பின் விலை இந்திய மதிப்பில் சுமார் 75 லட்சம் என்று சொல்லப்படுகிறது.

10.இயற்கை பேரழிவுகளுக்கு / இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளுக்கு பின்னர்..அப் பகுதிகளின் முதல் தேவையாக இருப்பது குடிநீர். அத் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என்கிற கூடுதல் பெருமையை கொண்டது இந்த ஜீப் !

தமிழகத்தில் இத்தகைய நிகழ்வுகள் குறித்து இருட்டடிப்பு செய்வதற்கும் , புறக்கணிப்பதற்கும் சுயலாப அரசியலே காரணம்.

தமிழகத்திற்கு இந்த ஜீப்கள் தான் இப்போதைய தேவை. பிரயோஜனமற்ற போராட்டம் என்கிற பெயரில் நடக்கும் சுயநல சுயலாப அரசியல் அல்ல !

GALMOBILE_JEEP #WaterPurificationVehicle #Israel

NaredenraModi #IndianPM

இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்சாப் செய்யவும்.

Loading...

Trending