சீனாவின் 5 பிங்கர் திட்டத்திற்கு எதிராக மோடியின் கனவு திட்டம் ஸ்ட்ரைக்கர் 2025 -ல் கைப்பற்ற திட்டம் !

சீனா இராணுவம் இந்திய நிலப்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் நுழைய அது திபெத் பகுதியை சுற்றியுள்ள 5 முக்கிய பகுதிகளை கைப்பற்றி அதன் மூலம் திபெத் பகுதியை முழுமையான ஆட்சியின் கீழ் கொண்டுவர திட்டம் தீட்டி 1960 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாக இருநாட்டு அரசியலை கவனித்து வரும் பலரும் குற்றம் சுமத்தினர்.

Loading...

அதற்கு சீனா இராணுவம் 5 பிங்கர் என பெயரிட்டதாகவும், லடாக், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், பூடான், நேபாளம் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும் என கூறப்படுகிறது, இந்நிலையில் சீனாவின் திட்டத்தை முறியடிக்கும் விதமாக மட்டுமல்லாமல், இந்தியாவை வலுப்படுத்தும் விதமாக புதியத்திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் எல்லையை பாதுகாக்கும் விதமாக அந்தமான், தமிழ்நாடு, லடாக், ஆகிய எல்லைகளை முழுமையான இராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனாவிடம் இழந்த இராணுவ பகுதிகளை 5 ஆண்டிற்குள் கைப்பற்றும் விதமாக திட்டத்தை அமைத்திருப்பதாகவும், இதற்கு ஆபரேஷன் ஸ்ட்ரைக்கர் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Loading...

இதற்கான முழுமையான திட்டமிடல் மற்றும் தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது, தமிழகத்தை பொறுத்தமட்டில் தஞ்சை விமானதளத்தை வலுப்படுத்துதல் மற்றும் இராமேஸ்வரத்தில் கப்பல்தளத்தை உருவாக்குதல் போன்றவை நடைபெறலாம் எனவும் எதிர்காலத்தில் இலங்கை நிலைப்பாடு மாறலாம் என்பதால் இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா கைவைக்கும் நிலையில் முழு நாடும் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் பலப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது, அகண்ட பாரதம் என்பதே மோடியின் கனவாக பார்க்க படுவதாகவும் அது நிச்சயம் நிறைவேறும் என்று நம்பிக்கையில் இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3902 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*