ஆலோசனை கூட்டத்தில் பிரதமரிடம் கோவபட்ட மம்தா அடக்கிய நிதிஷ் !!

சமீபத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார், அப்போது அனைத்து மாநில முதல்வர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் விதமாக பேச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Loading...

ஆலோசனையின் போது பிரதமர் மோடியுடன் பல்வேறு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து உங்களது கருத்துக்களை கூறுங்கள் என பிரதமர் மோடி மம்தா பானர்ஜியுடன் கூறியிருக்கிறார், அதற்கு மம்தா கொரோனா குறித்து பேசாமல் மோடியிடம் கோவப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர், மம்தா பேசும் போது, கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு அரசியல் செய்கிறது; என் மாநிலத்தில், மத்திய அதிகாரிகள் குழுவை அனுப்பி, பிரச்னையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என, சத்தம் போட்டு பேசினாராம்.

Loading...

‘இது முதல்வர்கள் கூட்டமா அல்லது கோல்கட்டாவில் நடக்கும் அரசியல் கூட்டமா’ என, பிரதமருடன் அமர்ந்திருந்த சில அமைச்சர்கள் பதிலுக்கு பேசியிருக்கிறார்கள்.

ஆனால், பிரதமரோ, மம்தாவின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். உடனே பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ‘
ஒவ்வொரு முதல்வரும் மாநில அரசியல் குறித்து பேச இது நேரமல்ல, இது கொரோனா குறித்த கூட்டம், நீண்ட நேரம் பேசினால், இந்த கூட்டம் முடிய, இரவு, 11:00 மணி ஆகிவிடும்; எனவே, யாரும் ஆறு நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது’ என, சொன்னாராம்.

மோடியும், ‘இது சரியான யோசனை’ என்றாராம். இதற்குப் பின்தான் பேச்சை முடித்திருக்கிறார், மம்தா. இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் காஷ்மீர் போன்று இந்து குடும்பங்களின் வீடுகள் கொளுத்தபட்டு, மதம் கலவரம் உண்டாகியுள்ளது, குறித்து ஆராய மத்திய அரசு குழுவினை அனுப்பிய பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்கு மூலம் பெற்றது, இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுவதால்.

மம்தா பானர்ஜி மத்திய அரசு குழுவை மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*