இன்று கேபினட் மீட்டிங், 30 ஆண்டுகளுக்கு பிறகு மிக பெரிய முடிவை மோடி எடுக்கலாம் !! பிரபல பத்திரிகையாளர் தகவல் !!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. டெல்லி 7, லோக் கல்யாண் மார்க் பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக்  கூட்டம் கூடுகிறது.

Loading...

இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பதா? தளர்த்துவதா என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதனைபோல், E மேலும், நாட்டின் பொருளாதாரம் குறித்தும், மருத்துவக் படிப்பில்  OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேதுறை அமைச்சர் பியுஷ் கோயல், மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் போக்ரியால், சுற்றுச்சூழல் துறை பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

Loading...

இந்நிலையில் ABP NEWS பிரபல பத்திரிகையாளர் விகாஸ் இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கலாம் எனவும் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாற்றம் செய்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது இந்தியாவில் இனி முகலாய படையெடுப்பு, இந்தியாவிற்கு எதிரான பாடங்கள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும் இந்தியர்கள் வரலாறு பாடமாக கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது, இதன் மூலம் பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்தியா புதிய மாற்றத்தை கொண்டுவர இருப்பதாகவும், ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இந்த கல்வி கொள்கையை முடிவிற்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

இந்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் பள்ளி பாடங்களில் இருந்து இஸ்லாமிய மன்னர்கள் பாடங்கள் நீக்கப்படும் அதற்கு பதிலாக இந்திய மன்னர்களின் வரலாறு இடம்பெறும் எனவும் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழி சார்ந்த மன்னர்கள் வரலாறு இடம் பெரும் எனவும் கூறப்படுகிறது.

புதிய கல்வி கொள்கைக்கு இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், இடதுசாரிகள் இன்னும் பிற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3935 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*