Connect with us

#24 Exclusive

திடீரென ராமதாஸ் வீட்டிற்கு வந்த மோடி சகோதரர் என்ன பேசினார்கள் இருவரும்?

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு பிரதமர் மோடியின் சகோதரர் பிரகாலத் மோடி திடீர் என வருகை தந்தார் இது குறித்து அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து பாமக தலைமை நிலையம் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளது. பாமக வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவுடன்
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சந்திப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்
முன்னேற்றம் குறித்து பேச்சு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இளைய சகோதரரும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவருமான திரு.பிரகலாத் மோடி இன்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதாகும்.

தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த அவரை மருத்துவர் அய்யா அவர்களும், பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும் வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின்போது, தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர் அய்யா அவர்களும், திரு. பிரகலாத் மோடி அவர்களும் விவாதித்தனர்.

Loading...

தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சமூக நீதிக்காக ராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தச் சந்திப்பின் போது, திரு. பிரகலாத் மோடி அவர்கள் நினைவு கூர்ந்தார்.பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ ( Beti Bachao Beti Padhao) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகம் ஒன்றை ராமதாஸ் அவர்களிடம் திரு.பிரகலாத் மோடி அவர்கள் வழங்கினார். ராமதாஸ் அவர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் திரு.பிரகலாத் மோடி அவர்கள் தெரிவித்தார். இவ்வாறு பாமக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Loading...

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending