புதின் பாணியில் மோடிக்காக கட்சியின் சட்டத்தை திருத்துகிறதா பாஜக ! இதனால் ஏற்படப்போகும் மாற்றம் என்ன ?

அமெரிக்கா, ரஸ்யா போன்ற நாடுகளில் ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபர்களாக பதவி வகிக்க முடியாது என்ற விதி இருக்கிறது, அதனை தற்போது ரஸ்யா பொது வாக்கெடுப்பு நடத்தி மாற்றிவிட்டது இனி 2036 – ம் ரஷ்ய அதிபர் புதினின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டு விட்டது என்று கூறலாம்.,

Loading...

இந்நிலையில் இந்தியாவில் அதுபோன்ற எந்த விதியும் இல்லை மாறாக பாஜகவில் ஒருவர் இரண்டு முறைக்குமேல் தொடர்ச்சியாக கட்சி பதவி அல்லது வேட்பாளராக இருக்க முடியாது என்ற விதி உள்ளது.

இந்நிலையில் பாஜக 2024 – ம் தேர்தலை கருத்தில் கொண்டு இப்போதே களப்பணியை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது, குறிப்பாக கொரோனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்களை கொண்டு சமூக வலைத்தளம் மூலம் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறி வருகிறது.

Loading...

இதன் பின்னணியில் 2024 -ம் ஆண்டு பிரதமர் மோடியை வேட்பாளராக நிறுத்த பாஜக ஒரு மனதாக தீர்மானித்துள்ளது, தொடர்ச்சியாக பாஜக 25 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் நாட்டில் எதிர்க்கட்சிகள் முழுமையாக செயல் இழக்கும் எனவும், நிர்வாக ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் இந்தியா உலக அளவில் வலுவான நாடாக மாறும் எனவும் அக்கட்சி கணக்கிட்டுள்ளது.

அதற்காக பாஜகவின் விதிகளில் மாற்றம் செய்ய அக்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கவேண்டும் என்பதே நாடு முழுவதுமுள்ள பாஜக தொண்டர்களின் முடிவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மோடிதான் பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்பது முடிவாகியிருக்கும் சூழலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்பட போகிறார்களோ?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*