Connect with us

#24 Exclusive

மோடி இருக்கும்வரை அதற்கு வாய்ப்பே இல்லை கதறும் அப்ரிடி !!

மோடி ஆட்சியில் இருக்கும்வரை இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான எந்த வாய்ப்பும் இருக்க போவதில்லை என அப்ரிடி கதறியுள்ளார்.

இந்தியாவில் தீவிரவாத செயல்களை தூண்டிவிட்டு இந்தியாவில் அமைதியை சீர்குலைப்பது, மற்றும் இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட காரணத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் பாக்கிஸ்தான் உடன் அனைத்து தொடர்புகளையும் முறித்து கொண்டது.

மேலும் பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் விளையாட சென்ற இலங்கை வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காரணத்தால் அங்கு வெளிநாட்டு அணிகள் செல்வதே குறைத்தது, அதனையடுத்து பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமை படுத்தப்பட்டது.

Loading...

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவது மோடி இருக்கும் வரை வாய்ப்பே இல்லை எனவும், மோடி ஒரு சார்பாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார், கடைசியாக 2012- ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

இதற்கிடையில் அப்ரிடி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் IPL போட்டியில் பங்கு பெற முடியாமல் போன வருத்தத்தில் புலம்புவதாகவும், உங்கள் நாட்டில் உள்ள தீவிரவாத குழுக்களை அழித்துவிட்டு பிறகு இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி பேசலாம் எனவும் அபிரிடிக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ராஜன் என்பவர் ட்விட்டரில் அபிரிடிக்கு கொடுத்த பதிலடியில் ஒரு திருத்தம் மோடி ஆட்சியில் இருக்கும் வரை மட்டுமல்ல உங்கள் நாட்டில் தீவிரவாதம் இருக்கும் வரை இந்தியர்கள் வரமாட்டார்கள் எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.

©TNNEWS24

Loading...

Trending