நாடாளுமன்றம் விரைகிறார் மோடி 35 A நீக்கம் கிடையாது இது அதற்கும் மேலே ! காஷ்மீரில் இனி இந்திய கொடி மட்டும்தான்.

நாடாளுமன்றம் விரைகிறார்  மோடி  35 A நீக்கம் கிடையாது இது அதற்கும் மேலே !   காஷ்மீரில் இனி இந்திய கொடி மட்டும்தான்.

ஜம்மு காஷ்மீர்.,

MSD அணியினர் அதாவது மோடி (M) அமிட்ஷா (Sha ) அஜய் தோவல் (doval ) என்ன நினைக்கிறார்கள் என்பதனை யாரும் கணிக்க இயலாது, இதனை ஊடகத்துறையினரே ஏற்றுக்கொண்டுள்ளனர். சமீபத்தில் நடந்த அமைச்சரவையில் யார் இடம்பெறுவார்கள் என்ற தகவலும் அப்படிதான்.

Loading...

அந்த வகையில் காஷ்மீரில் பிரிவு 35 A மற்றும் 370 பிரிவு நீக்கப்படும் என்று தகவல்கள் நேற்றுமுதல் வெளியான நிலையில் தற்போது ஜம்மு நிலைப்பாட்டு குழுவினரின் அறிவிப்பு, இந்திய மக்கள் அனைவரையும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

ஆம் தற்போது பிரிவு 35 A அல்லது 370 எந்த பிரிவையும் மத்திய அரசு நீக்கப்போவது இல்லை அதற்கு பதிலாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 3 மாநிலங்களாக பிரிக்கப்பட இருக்கிறது ஜம்மு, லடாக், காஷ்மீர் என மூன்று பகுதிகளாக பிரித்து காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் யூனியன் அந்தஸ்து கொடுக்க இருக்கிறது. இதன்மூலம் காஷ்மீர் எப்போதும் ஆளுநரின் கீழ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதுதான் MSD (மோடி, ஷா, தோவல்) அணியினரின் தற்போதைய நிலைப்பாடு இதற்கு ஆதாரமாக நேற்று இரவு முதல் காஷ்மீரின் அனைத்து மாவட்ட காவல்நிலையங்களும் ராணுவத்தின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன, மெஹ்பூவா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் வெளியில் வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாஜகவின் அனைத்து லோக்சபா, ராஜ்ய சபா எம்.பி களும் ஆகஸ்ட் 5, 6, 7 தேதிகளில் நாடாளுமன்றத்திற்கு கண்டிப்பாக வர கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் நிச்சயம் காஷ்மீர் குறித்து இந்து பண்டிகளுக்கு பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இருக்கிறது.

இன்று பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமிட்ஷா,பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் ஆகியோர் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது எதிர்பார்ப்பினை மேலும் அதிகரித்துள்ளது.

எது எப்படியோ ஆகஸ்ட் 15 அன்று இந்திய தேசிய கொடி காஷ்மீர் முழுவதும் எந்த தடையும் இன்றி பறக்க போகிறது, அதனை காஷ்மீரில் ஏற்றிவைக்கும் முதல் பிரதமதாக மோடி இருப்பார் என்பது உறுதியாகிவிட்டது.

MSD கூட்டணியால் முடியாதது வேறு யாரால் முடியப்போகிறது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *