Connect with us

அரசியல்

ஸ்டாலினுக்கு துடைத்துவிட்டது யார் தெரியுமா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க வீரமணி பாய்ச்சல் !

மிசா குறித்த விவாதங்கள் தற்போது தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ளது இந்நிலையில் ஸ்டாலின் மிசாவில் அடிவாங்கினாரா இல்லை பால கங்கா சொன்னதுபோல் கசமுசா செய்து அடிவாங்கினாரா என்ற கேள்வியே அதிகமாக எழுந்துள்ளது. இந்நிலையில் வரலாற்றை நினைவு படுத்தி பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வீரமணி அந்த அறிக்கைபின்வறுமாறு.

தி.மு.க.வின் தலைவர் மானமிகு சகோ தரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 1976 இல் ‘மிசா’வில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்து வரும்போதே (திருமணம் ஆகிய சில வாரங்களுக்குள் அவரைத் தேடுவதாக அறிந்த அப்போது ‘முன்னாள்’ ஆக்கப்பட்ட முதலமைச்சர் கலைஞர் அவர்களே காவல் துறையை அழைத்து, ‘‘வீட்டில் உள்ளார், வந்து அழைத்துப் போங்கள்” என்று கூறி, வழியனுப்பி வைத்த நிலையில்) அவரை அடித்துக் காயப்படுத்தி, இரவு 10 மணிக்கு மேல் 1976 பிப்ரவரி முதல் வாரத்தில், அநேகமாக பிப்ரவரி 3 அல்லது 4 ஆம் தேதி இருக்கும் – எனது அறையில் அவர் தள்ளப்பட்டபோது, அவர் என்மேல்தான் வந்து விழுந்தார். அவருக்கு அப்போது ஆறுதல் கூறி, ரத்தம் வழிவதைத் துடைத் தவன் நான் என்பது ஆதாரப்பூர்வமான வரலாறு; பிறகு அவரை சிட்டிபாபு அறையில் மாற்றினர்! சிட்டிபாபுவும், மற்றவர்களும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர்.

சுமார் ஓராண்டு ‘மிசா’ கைதியாகவிருந்த தளபதியும், நாங்களும் மற்ற ‘மிசா’ கைதி களும் விடுதலை செய்யப்பட்டோம். இது தான் வரலாறு!

Loading...

சென்னை மத்திய சிறைச்சாலையில் 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், அரசியல் கைதிகளைக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்திட – மாண்புமிகு ஜஸ்டீஸ் எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கையை (303 பக்கங்கள்) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Loading...

அதில், 29 ஆம் பக்கத்தில் இறந்த முன் னாள் மேயரும், எம்.பி.யுமான சிட்டிபாபு எழுதிய டைரியில் உள்ளதையும் ஜஸ்டீஸ் எம்.எம்.இஸ்மாயில் பதிவு செய்துள்ளார்.

பாரா 4.18:

‘‘பிறகு, அவர், திரு.எம்.கே.ஸ்டா லினை அடித்தது குறித்து எழுதுகிறார். ஸ்டாலின் அவர்களிடம் மன்றாடியதை அவர் குறிப்பிடுகிறார். ஸ்டாலினை அடித்தே கொன்றிருப்பார்கள் என்று கருதியதாகக் கூறினார். மேலும், அவர் தொடர்கிறார்:

‘‘ஏனையோர் தரையில் படுத்துக் கிடந்தனர். அவர்கள் உதவிக்காக எழுந்து வர முடியாத நிலையில் இருந்தனர். ஏனெனில், வந்தவர்கள் எமதூதர்கள். உடனே நான் ஒரு முடிவுக்கு வந்தேன். உடனே, நான் என் தம்பியைத் தள்ளிக் கொண்டு குறுக்கே ஓடினேன். தடி அடிகள் என் கழுத்தில் விழுந்தன. அவை, அடி களே அல்ல! கொல்லன் உலைக் களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பின்மீது சம்மட்டி கொண்டு அடிப் பதைப் போன்று அவை இருந்தன. அவை என் கழுத்தில் சம்மட்டிக் கொண்டு தாக்குவதைப் போல் விழுந்தன. இந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட பின்னர், என் அரு மைத் தம்பியை அறைக்குள் தள்ளிக் கொண்டுவர என்னால் முடிந்தது. இச் செயல் எனக்கு நிம்மதியைத் தந்தது. இதேபோல, அவர்கள் வீராசாமியைத் தூக்கி, ஒரு குத்துவிட்டு அறைக்குள் தள்ளினர். நீலம் மூச்சு விடத் திணறினார். அவர் வி.எஸ்.ஜி.க்கு முன்னதாக அறைக் குள் தள்ளப்பட்டார். ஸ்டாலின் இந்த அடிகள் எல்லாவற்றையும் மறந்து, அவரது உடன்பிறப்புகள் போன்றவர்கள் அறைக்குள் வர உதவினார். அவர்கள் தரையில் படுக்க அவர் தனது மேல் துண்டை விரித்தும் போட்டார்.”

பாரா 4.19:

திரு.ஸ்டாலின், தம்மிடம், தன்னைப் பற்றி என்னென்ன கேட்டறிந்தார் என் றும், தான் எவ்வாறு அவருக்கு ஆறுதல் அளித்தார் என்பதையும் தொடர்ந்து திரு.சிட்டிபாபு கூறியுள்ளார்.

திரு.வீரமணியின் முகம், அவர் பட்ட அடிகளின் காரணமாக வீங்கி இருந்தது என்றும், திரு.என்.எஸ். சம்பந்தம் அடி யின் காரணமாக முன்பு ஆபரேஷன் செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் வலி எடுப்பதாகக் கூறியதையும் இந்த நோட் டுப் புத்தகம் குறிப்பிடுகிறது. மறைந்த திரு.சிட்டிபாபு அவர்கள், சிறை அதிகாரி களின் நடவடிக்கையை ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டையர் என்ன செய்தாரோ அவ்வாறே இருந்தது என்று அத னுடன் ஒப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.

பாரா 4.20:

1976 பிப்ரவரி திங்கள் 1, 2 தேதிகளில் என்னென்ன நடந்தது என்பதை, மறைந்த திரு.சிட்டிபாபுவின் நோட்டுப் புத்தகம் இவ்வாறு விளக் கியுள்ளது. ஏற்கெனவே, கூறப்பட்ட காரணங்களுக்காக 1976 பிப்ரவரி 1, 2 தேதிகளில் சென்னை, மத்தியச் சிறையில் என்னென்ன நடந்தது என்பதனைச் சரியாகக் குறிப்பிட்டிருக் கும் மறைந்த திரு.சிட்டிபாபுவின் அறிக் கைகளை நான் ஒப்புக் கொள்கிறேன்” என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உண்மை இவ்வளவு சான்றுகளுடன் பவனி வருகையில், காவிகளான ‘‘கோய பெல்சின் குருநாதர்கள்” – ‘‘ஸ்டாலின் ‘மிசா’வில் கைதாகவே இல்லை” என்று துணிந்து, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைச் சொல்லுகிறார்கள் என்றால், இவர்களைவிட இழிபிறவிகளை இந்த பூமியில் காண முடியுமா?

கொஞ்சம் விட்டால், ‘‘ஸ்டாலின் வேறு; இவர் வேறு” என்றுகூட சொல்வார்கள்போல – ‘‘வெள்ளரிப் பழத்துக்கு பூண் போடு வதுபோல!”

‘‘அட, பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்க அட போக்கத்த ஆட்களா” என்ற உடுமலை நாராயண கவியின் பாட்டு வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

மகா வெட்கக்கேடு இது!

இவ்வாறு வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

ஆமாம் மிசா காலத்தில் சிறையில் சாப்பாடு போட்டார்களா?

Loading...

Trending