தஞ்சையில் அவமதிக்கப்பட்டது பெரியார் சிலையா? திருவள்ளுவர் சிலையா? ஸ்டாலின் குழப்பம்

Loading...

தஞ்சையில் உள்ள பிள்ளையார்பட்டியில் இன்று மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையை அவமதித்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசி திருநீறு அணிவித்த பாஜகவுக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவுக்கும் இடையே கருத்துப்போர், டுவிட்டர் போர் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Loading...

இந்த நிலையில் தஞ்சையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதாகவும், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது – தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டதாகவும் இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் முக ஸ்டாலின் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். தஞ்சையில் அவமதிக்கப்பட்டது பெரியார் சிலையா? அல்லது திருவள்ளுவர் சிலையா? என்பதை முடிவு செய்துவிட்டு அதன்பின்னர் டுவீட் போடவும் என முக ஸ்டாலின் அல்லது அவரது அட்மினை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

முக ஸ்டாலின் மாறி மாறி பேசுவது வழக்கமான ஒன்று தான். அதற்காக பெரியார் சிலைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் அவருக்கு வித்தியாசம் தெரியாதா? ஒருவேளை இருவரும் தாடி வைத்திருந்ததால் குழம்பி போய்விட்டாரா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*