ஷகிலா படத்துடன் ஒப்பிட்ட பிரசன்னா, வீடியோ காட்சியில் இருப்பது யார் என வெளியாகும் என வந்த மிரட்டல் பதிவை நீக்கிவிட்டு ஓட்டம் !! ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்.

திமுகவை சேர்ந்த பேச்சாளர் தமிழன் பிரசன்னா என்பவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பிரதமரை அவமானப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு உள்ளன, பொதுக்கூட்டம் ஒன்றில் ஸ்டாலினை மேடையில் வைத்து கொண்டே ஒருமையில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Loading...

அதன்பிறகு தூக்கு கயிறு கொண்டுவரவா என அரசியல் நாகரிகம் என்பது சிறிதும் இன்றி மிகவும் அநாகரிகமாக பேசினார், இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் கொரோனா குறித்து உரையாற்றினார் அப்போது உலகிற்கு இந்தியா வழிகாட்டுவதாகவும் கொரோனாவை அனைவரும் வெல்வோம் என குறிப்பிட்டு இதுவரை இந்தியாவில் இல்லாத அளவில் 20 லட்சம் கோடி கொரோனாவில் இருந்து மீள பொருளாதார மீள் நடவடிக்கைக்கு கொடுக்கப்படும் என அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை திமுகவை சேர்ந்த பிரசன்னா என்பவர் தனது ட்விட்டர் கணக்கில் படு மோசமாக தரம் தாழ்ந்து பதிவிட்டார் அதில், :- ஷகிலா படத்தில் வருகிற ஹீரோ இப்படித்தான் பேசுவான் பேசுவான்… உலக தத்துவம்லாம் பேசுவான். படம் பார்ப்பவர்கள் டேய் சீக்கிரம் பேசித்தொலைடா என்பதுபோல பார்த்துக்கொண்டிருப்பார்கள்…. ஒரே தேசமே என குறிப்பிட்டு பிரதமர் படத்தை அதில் இணைத்திருந்தார்.

Loading...

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது உடனடியாக பலர் அவரது பதிவை காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளை டேக் செய்து கைது செய்யவேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர், மேலும் விக்னேஷ் என்ற நபர் பிரசன்னாவிற்கு சரியாக 5 நிமிடம் உனக்கு இதற்குமேல் மரியாதை கிடையாது, நீ பிரதமர் பற்றிய ட்விட்டை 5 நிமிடத்தில் நீக்கவில்லை என்றால் உன் வீடியோ காட்சியில் இருந்த பெண் யார் என்பது வெளியிடப்படும் என எச்சரித்தார்.

மேலும் பிரசன்னா காவலர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவையும் பகிர்ந்தார், இந்நிலையில் அடுத்த நிமிடமே பிரசன்னா தனது கேவலமான பதிவை நீக்கிவிட்டு ஓட்டம் பிடித்தார், கடந்த ஆண்டு பிரசன்னா மீது குற்றம் சுமத்தி பாலியல் வீடியோ காட்சி ஒன்று வெளியானது, அதனை தான் இல்லை என்று மறுத்த பிரசன்னா இப்போதுவரை என்ன உண்மை என்பதை வெளியிடவில்லை.

பிரசன்னா தொடர்ந்து சர்ச்சையாக விமர்சனம் செய்தது கடந்து இப்போது பாலியல் ரீதியாக விமர்சனம் செய்யும் நிலைக்கு வந்திருப்பது திமுகவின் தரத்தை காட்டுவதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் பிரசன்னாவை அடக்கி வையுங்கள் இல்லை என்றால் கட்சியை கெடுத்து விடுவான் இவன் பேசிய பேச்சு டெல்லி வரை சென்றால் அவனுக்கு நஷ்டமல்ல உங்களுக்குத்தான், ஒன்று அவனை கண்டியுங்கள் இல்லை என்றால் பெண்ணியம் நாம் பேச முடியாது என ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா இல்லை வேடிக்கை பார்ப்பாரா?

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*