Sslc ல் தமிழில் தேர்ச்சி பெறாத மு.க.ஸ்டாலின், இவரா தமிழை காப்பாற்ற போகிறார்..? வச்சி செய்யும் நெட்டிசன்கள் , வைரல் ஆகும் #SslcFailStalin

SSLC யில் ஸ்டாலின் தமிழில் பெற்ற மதிப்பெண்கள் எத்தனை தெரியுமா? வச்சு செய்யும் நெட்டிசன்கள் !

Loading...

சமூகவலைத்தளம்.,

திமுக தலைவர் முக ஸ்டாலின் SSLC அரையாண்டு தேர்வில் தமிழில் பெற்ற மதிப்பெண்கள் குறித்து இணையதளத்தில் நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு இடங்களில் உளறி வருகிறார், கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரச்சாரம் செய்த ஸ்டாலின் செந்தில்பாலாஜியை அருகில்வைத்துக்கொண்டு எம் எல் ஏ கணக்கில் உளறியது நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வந்தனர்.

Loading...

மேலும் தமிழ் பெயர்களை ஒவ்வொரு கூட்டத்திலும் ஸ்டாலின் உளறிவருவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது, இந்நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் 11-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் அதாவது அப்போதைய SSLC-யில் பெற்ற மதிப்பெண்கள் குறித்து முகைப்பூர் முனைவர் ஜெயப்ரகாசம் சொன்ன தகவல்களால் ஸ்டாலின் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கணக்கில் உளறுகிறார் என்று நீங்கள் கிண்டல் செய்துகொண்டிருக்கீறீர்கள் ஆனால் அவர் அரையாண்டு தமிழ் பாடத்தில் 35% மதிப்பெண்களை கூட பெறமுடியாமல் தோல்வி அடைந்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற என்னென்ன வழிகளை பின்பற்றினார் என்பதை நானும் சக மாணவர்களும் அறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுதான் தற்போது திமுக தலைவரை நோக்கி கிண்டல் செய்ய காரணமாக அமைந்துள்ளது, சிலர் தமிழ் பாடத்திலேயே வெற்றிபெறாத இவரா தமிழக மக்களை முன்னேற்ற போகிறார் என்று கிண்டலும் பலவிதமான மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இதுவரை திமுக தரப்பிலும் தற்போது இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*