ஆட்டத்தை தொடங்கினார் கனிமொழி துரைமுருகன் விவகாரத்தில் மோதல் !!! வெளிச்சத்திற்கு வந்தது? !!!

TNNEWS24 : திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அப்பதவியை கைப்பற்றி கட்சியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் ஸ்டாலின், அவருக்கு துணையாக அவரது தங்கை கனிமொழியும் ஸ்டாலின் தான் திமுகவின் சரியான தலைமை என்று அவர் பின்னால் அணி வகுத்தார்.

Loading...

இந்நிலையில் கனிமொழிக்கு தூத்துக்குடியை ஒதுக்கி அம்மாவட்டதில் கட்சியை வலுப்படுத்தும் பணியை மேற்கொள்ளுமாறு ஸ்டாலின் கூறிய நிலையில் அதனையடுத்து ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கி சூடு என பின்னால் நடந்த போராட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார் கனிமொழி.

இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் கனிமொழியின் வளர்ச்சி தென் மாவட்டங்களில் அழகிரி வளர்ச்சி போல் பின்னாளில் தனக்கு இடையூறாக வந்துவிடுமோ என ஸ்டாலின் அஞ்சுவதாக கூறப்படுகிறது, அதிலும் குறிப்பாக தனக்கு பிறகு தனது மகன் காலத்தில் அது மிகவும் ரிஸ்க் ஆக அமைந்துவிடும் என சந்தேகம் கொள்கிறாராம்.

Loading...

அதனால்தான் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கனிமொழி நேரடியாக சென்று துக்கம் விசாரித்த நிலையில், உதயநிதி ஸ்டாலினையும் நேரடியாக களத்திற்கு அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது, இதனால் கடும் அதிருப்தியில் கனிமொழி இருக்கிறாராம், இந்நிலையில்தான் தற்போது திமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கேட்டு முதலியார் சமூகத்தினர் போர் கொடி தூக்கியுள்ளனர்.

இதுவரை அண்ணாதுரை , நாவலூர் நெடுஞ்செழியன், அன்பழகன் என பொது செயலாளர் பதவி முதலியார் சமூகத்தினரிடமே இருந்துள்ளதை சுட்டி காட்டி தங்களுக்கு வழங்கவேண்டும் என ஸ்டாலினை வலியுறுத்து வருகிறது, ஆனால் துரைமுருகனோ பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொது செயலாளர் பதவிக்கு காத்து இருக்கிறாராம்.

இந்நிலையில் தற்போது அதிரடியாக தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் கனிமொழி அவர் கேட்பது பொதுச்செயலாளர் பதவியை கிடையாது மாறாக பொருளாளர் பதவியை கேட்டு இருக்கிறாராம், கட்சியில் இனியும் காலம் தாழ்த்தினால் என்ன நடக்கும் என தெரியாது எனவும் மாநில அரசியலை விட்டுவிட்டு மத்திய அரசியலுக்கு சென்றுவிட்ட தனக்கு ஒரு பிடிமானம் வேண்டும் என நேரடியாக சொல்லிவிட்டாராம்.

இதனால் என்ன செய்வது என தெரியாமல் நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம் ஸ்டாலின், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும்கட்சியை போன்று எதிர்கட்சியிலும் பல்வேறு அரசியல் ஆட்டங்கள் அரங்கேறலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*