இந்தி எதிர்ப்பு ஸ்டாலினை ரவுண்டுகட்டி அடித்த சிறுவர்கள் வைரலாகும் வீடியோ !

Loading...

சமூகவலைத்தளம்.,

சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று திமுக தலைவர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு இதுதான் இன்றைய தமிழ் தலைமுறைகளின் மனநிலை என்று பரவியது, அதுகுறித்து முழுமையான விளக்கத்தை தேடியதில் பல தகவல்கள் கிடைத்துள்ளது.

Loading...

இந்த விடியோவை எடுத்து வெளியிட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விஜயன் என்பவர் தனது முகநூலில் பதிவிட்ட கருத்துக்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, எதார்த்தமாக நான் எனது வேலை காரணமாக நடந்து சென்றபோது முதலில் 10 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து சுவற்றில் திருடன் என்று எழுதி கருணாநிதி மற்றும் ஸ்டாலின் போஸ்டர்களை மிதித்தும் அடித்தும் வந்தார்கள்.

மெல்ல அருகில் சென்ற போது உன் வீட்டு புள்ளங்க மட்டும் இந்தி படிக்கலாம் ஆனா நாங்க படிக்க கூடாதா? எங்களுக்கு அரசாங்கம் கொடுக்க வந்த நவோதயா பள்ளிகளை ஏன் வரவிடமா போராடுற உன் மகள் ஸ்கூலை மூடவேண்டியதானே என்று கூறி கிரிக்கெட் பந்தை வைத்தே அடித்து கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் எனது செல்போனில் படமெடுக்க நினைத்தேன் அதை பார்த்ததும் பாதி சிறுவர்கள் ஓடிவிட்டனர், ஆனால் மீதி பேர் தொடர்ந்து திருடன் திருடன் என்று சொல்லியே அடித்துக்கொண்டே நின்றனர் என்றார்.

விடியோவை பார்க்க :

திமுக தலைவர்கள் தொடர்ந்து நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு வந்தால் தமிழ் பாதிக்கும் என்று எதிர்ப்பதெல்லாம் சும்மா ! தாங்கள் கோடி கோடியாய் செலவு செய்து கட்டிவைத்துள்ள பள்ளிகள் வருமானம் இன்றி சென்றுவிடும் என்பதற்காக எதிர்க்கின்றனர் என்று பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர், மேலும் தாங்கள் நடத்தும் பள்ளியில் இந்தி கத்து கொடுத்தால் அழியாத தமிழ், அரசாங்கம் வருடத்திற்கு 5 ஆயிரம் ரூபாயில் சொல்லி கொடுத்தால் அழிய போகிறதா என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில்தான் சிறுவர்களின் மனநிலையில் இதே கருத்து எதிரொலித்திருப்பதாகவும், இனியும் தமிழக மக்களை திமுக ஏமாற்ற முடியாது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது போன்ற வருங்கால தலைமுறையினரின் மனநிலையை அனைத்து அரசியல் தலைவர்களும் உணரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*