முன்பே 10 நிமிடம் மெழுகு வர்த்தி ஏந்திய ஸ்டாலின், பிரதமர் பேச்சை கிண்டல் செய்தவர்களை வச்சு செய்யும் பாஜகவினர்

இன்று காலை பிரதமர் மோடி சமூகவலைத்தளத்தில் தோன்றி மக்கள் முன்னிலையில் பேசினார். கொரோனாவிற்கு எதிராக ஊரடங்கு சிறப்பாக கடைபிடிக்கபட்டு வருவதாக கூறிய அவர் இந்தியாவின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்கு நன்றி சொல்லவும், நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தவும் கொரோனாவுக்கு எதிராக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும் எனவும்.,

Loading...

வரும் 5-ந் தேதி (ஞாயிறு ) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அனைத்து செல்போன், விளக்குகள், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள், என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார், இதற்கு ஆதரவு வெளிப்படையாக உருவான நிலையில் சமூகவலைத்தளத்தில் திமுக உள்ளிட்ட எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

விளக்கு ஏற்றினால் கொரோனா ஓடிவிடுமா? ஒரு நாள் செய்தால் பலன் கிடைக்குமா என்று பல்வேறு வகையில் கிண்டல் செய்தனர், இந்நிலையில் வரலாற்றை திருப்பி எடுத்துக்காட்டி பாஜகவினர் திமுகவினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதில் 2010 ம் ஆண்டு 10 வது மாதம் 10 ம் தேதி அப்போதைய துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தில் கூடினார்.

Loading...

அப்போது அவருடன் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் இருந்தனர் இந்நிலையில் சரியாக புவி வெப்பமாவதை குறைக்கும் முறை என கூறி அடையாளமாக 10 மணிக்கு 10 நிமிடம் அனைத்து மின்சார சாதனங்கள் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தியை ஏந்தினர்.

அதன் பிறகு அங்கு பேசிய ஸ்டாலின் புவி வெப்பமாதலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் முடிந்த அளவு அனைவரும் இது போல் மாதத்தில் சில நாட்கள் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், ஆதாரம், இந்நிலையில் விளக்கு ஏற்றினால் கொரோனா ஓடிவிடும் என்று கேட்டவர்களிடம், ஸ்டாலின் 10 நிமிடம் மெழுகுவர்த்தி ஏந்தியதால் புவி வெப்பமயமாதல் குறைந்துவிட்டதா என கேள்வி எழுப்புகின்றனர்.

உளவியல் ரீதியாக வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து சிறிது விடுபடவும், இந்தியர்களின் ஒற்றுமையை உலகிற்கு தெரியப்படுத்தவே மோடி இது போன்று கூறினார் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*