Connect with us

#24 Exclusive

நிலைமை மாறினால் அவ்வளவுதான் பிறந்தநாள் விழாவில் மு.க அழகிரி பரபரப்பு பேச்சு !!

மதுரையில் மு.க அழகிரி தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் 69வது பிறந்த நாள் விழா, மதுரையில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை தனது இல்லத்தில் அழகிரி, கு பிறந்த நாளை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ள பிறந்த நாள் விழாவில், அழகிரி பங்கேற்கிறார்.

விழாவில் பங்கேற்ற அவர் இப்போது இருக்கும் நிலைமை எப்போது மாறும் என தெரியாது, நிலைமை மாறினால் அவ்வளவுதான் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார், அத்துடன் அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகிறார்கள், ஆனால் நம்மால் பயனடைந்தவர்கள் பேச மறுக்கிறார்கள் காலம் ஒரே நிலையில் இருக்காது மாறும் அன்று நிலைமை மாறினால் தெரியும் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை சென்னையில் முக அழகிரி பிரமாண்ட பேரணியினை நடத்தி அவரது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார், அதன் பிறகு முழுமையாக அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார், அழகிரி ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பார் என்றும் முதல் மாநாடு மதுரையில் நடத்தப்படும் என்ற செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

அழகிரி நிலைமை மாறினால் அவ்வளவுதான் என யாரை எச்சரித்தார் தன்னால் பயன் அடைந்தவர்களையா இல்லை திமுகவின் தற்போதைய முன்னணி தலைவர்களையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரமுகர்கள் வாழ்த்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Loading...

நடிகர் ரஜினிகாந்த் அழகிரிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததுடன் விரைவில் நல்லது நடக்கும் என குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

Loading...

Trending