கூட்டு சேர்ந்த ஸ்டாலின் எடப்பாடி கடந்த 24 மணிநேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் !!

2021 ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தல் இந்த ஆண்டே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது, தமிழகத்தில் அடுத்த ஆட்சியை பிடிப்பதற்கு திமுக முயன்று வரும் சூழலில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்ற அதிரடி திட்டம் வைத்திருக்கிறார் என்பதுடன் அதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பு ஆதரவாளர்களை பலி கொடுத்துள்ள சம்பவம் கடந்த 24 மணி நேரத்தில் அரங்கேறியுள்ளது.

Loading...

மத்திய அமைச்சரவை வருகிற ஆகஸ்ட் 5 தேதிக்கு பிறகு விரிவாக்கம் செய்யபட இருக்கிறது, இதில் ஜோதிராத்யா சிந்தியா இன்னும் பிற கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கின்றன, தமிழகத்தில் ரவீந்திரநாத் குமாருக்கு இணை அமைச்சர் பதவி கொடுப்பதாக தகவல் கொடுக்கப்பட்டு விட்டது. இது பன்னீர் செல்வம் தரப்பிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் எடப்பாடி தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் முதல்வர் அதிகாரம் சென்றதும் கட்சி யாரிடம் செல்லும் என்பது தெரியாத நிலையில் மத்திய அமைச்சர் பதவி முக்கியத்துவம் பெரும் மேலும் மோடியின் நெருக்கமும் உண்டானால் தனக்கு எதிராக திரும்புவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார் அதற்கு அவர் எடுத்துள்ள அஸ்திவாரம்தான் பாஜக கூட்டணியை முறிப்பது.

Loading...

இதை தொடங்கி வைத்தவர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் கோவை செல்வராஜ் எம் ஜி ஆர்.. பாஜகவினர் தெருவில் நடமாட முடியாது என்று பேசி சலசலப்பை உண்டாக்கினார், அதன் பிறகு நேற்று எடப்பாடி செய்த செயல் பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் B.S சீனிவாசன் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார், இவர் பன்னீர் செல்வத்தை சந்திக்க அனுமதி கேட்டு அவர் மறுத்துவிட்டார்

நேற்றைய சம்பவம் கட்சி அளவில் நடந்தால் அடுத்த சம்பவம் தொண்டர்கள் வரை தொடர்ந்துள்ளது இந்து கடவுள்களை கொச்சை படுத்தி வீடியோ வெளியிட்டவன் மீது குண்டர் சட்டத்தை போட்ட தமிழக அரசு, ஈ வே ரா சிலையில் காவி சாயத்தை ஊற்றிய இளைஞன் அருண் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது.

இது எடப்பாடி தரப்பில் என்றால் திமுக தரப்பில் மதன் ரவிச்சந்திரன் மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது, அவரது பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது, அடுத்ததாக மாரிதாஸ் மீது news18 நிர்வாகம் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது மேலும் வீடியோவை நீக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது, இது போதாது என்று பெண் பத்திரிகையாளர் அமைப்பின் மூலம் கிஷோர் கே சுவாமியை கைது செய்யவேண்டும் என மீண்டும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இவை அனைத்தும் தமிழகத்தில் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி வருகின்றன, திமுக தரப்பில் வழக்கு தொடுக்கிறார்கள் என்றால் அதிமுக தரப்பில் பாதுகாப்பை விலக்கி சாதகமாக எடப்பாடி நடந்து கொள்கிறார்.என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இவை அனைத்தும் உள்துறை அமைச்சர் அமிட்ஷாவிற்கு இங்கிருக்கும் நபர்களால் தகவல் அளிக்கப்பட்ட வண்ணம் உள்ளன என்றும்…,

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் விரைவில் அரங்கேறும் என்று கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3951 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*