#BREAKING அரசியலில் அதிகாரபூர்வமாக இறங்குகிறார் அழகிரி ! ஸ்டாலின் தரப்பு கடும் அதிர்ச்சி !!!

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீண்டும் முழு நேர அரசியலில் இறங்க இருப்பதாகவும், இதற்காக மாவட்டம் தோறும் தனக்கு நெருக்கமானவர்கள் உடன் ஆலோசனை நடத்திவந்தவர் தற்போது தேசிய கட்சியான பாஜகவில் இணைவதாக முடிவெடுத்து இருப்பதாகவும் இது குறித்து விரைவில் அதிகார பூர்வ தகவல் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

திமுகவில் தென் மாவட்ட பொறுப்பளராக பதவி வகித்த அழகிரி, தென் மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், பின்பு ஸ்டாலினுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக தனித்து இருந்தவரை வைகோ சந்தித்து பேசியதை தொடர்ந்து கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

அதன் பின்பு பல்வேறுமுறை முயற்சி செய்தும் அவரால் கட்சியில் இணையமுடியவில்லை, கருணாநிதி மறைவிற்கு பின்னர் தமிழகம் முழுவதும் தொண்டர்களை திரட்டி அஞ்சலி செலுத்தினார், அதன் பிறகு இதுவரை அமைதியாக இருந்து வருகிறார், அழகிரி மீண்டும் கட்சிக்குள் வந்தால் எதிர்காலத்தில் உதயநிதிக்கு எதிராக முடியலாம் என கணக்கிட்டு ஸ்டாலின் தவிர்த்து வந்ததாக கூறப்பட்டது..,

Loading...

இந்நிலையில் அழகிரி தேசிய கட்சியான பாஜகவில் இணைவது குறித்து முடிவெடுத்துள்ளதாகவும், கொரோனா முடிவிற்கு பிறகு டெல்லியில் பிரதமரை சந்தித்து கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது, தற்போது இந்தத்தகவல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எட்டவே தென் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார், மேலும் அவருடன் எந்த கிளைக்கழக நிர்வாகி கூட செல்லக்கூடாது எனவும் அதற்கு மாவட்ட செயலாளர்களே பொறுப்பு என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இவர் மோடியுடனா இணைய வேண்டும் இது பிற்காலத்தில் ஏதும் நமக்கு எதிராக முடியுமா என்று நெருக்கமானவர்களிடம் ஸ்டாலின் விசாரித்து வருகிறாராம், ஆனால் அழகிரி தரப்போ 2021 சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு பாஜகவில் இணைய இருப்பதாகவும் தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் எனவும் கூறிவருகின்றனர்.

விரைவில் திமுகவில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் அரங்கேறலாம் என கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*