Connect with us

தமிழ்நாடு

கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் – அமைச்சர் தகவல் !

கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் – அமைச்சர் தகவல் !

சென்னையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மக்களை சமூகவிலக்கம் செய்யும் விதமாக நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனாலும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவால் அதிக பலன் கிடைக்காது என்றும் குறைந்தது மூன்று வாரங்களாவது அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்தன்.

Loading...

இந்நிலையில் தமிழகத்தில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடை, மருந்து கடை உள்ளிட்டவற்றை தவிர்த்து அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடவும், ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Loading...

இந்நிலையில் தமிழக அமைச்சர் வேலுமணி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 3000 வீடுகள் சென்னையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கும் ஸ்டிக்கர்கள் அவர்களது வீட்டின் வெளியே சென்னை மாநகராட்சியால் ஒட்டப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading...

Trending