Connect with us

#24 Exclusive

பங்கம் செய்த ராஜேந்திர பாலாஜி இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலம் வைரலாக பரவும் வீடியோ

Published

on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலை கடுமையாக விமர்சித்து பேசினார் மேலும் இந்தியர்கள்தான் இந்தியாவை ஆளமுடியும் இவர்கள் இத்தாலிகாரர்கள் என்று பேசி அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சியினர்,

தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா தலைமையில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குச் சென்று, “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கைகள் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்றுள்ளது. அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து அவரை முழுமையாகச் சோதித்து தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்” என்று மருத்துவர்களிடம் மனு அளிக்க முயன்றார்.
மனநல காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகா, காங்கிரஸாரின் மனுவை வாங்க மறுத்துவிட்டார். “தனிநபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நாம் முடிவு செய்யமுடியாது. காவல் நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ சென்று முறையிட்டு சிகிச்சைக்கு அனுமதி பெறலாம்” என விளக்கி அவர்களை திருப்பி அனுப்பினார்.

மேலும் பேசிய செய்தி தொடர்பாளர் அமைச்சர் இதே போன்று பேசினால் நாக்கு அறுக்கப்படும் என்று எச்சரித்தனர் இதே கருத்தைகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான குஷ்பூவும் இதை வழிமொழிய அதற்கு ராஜேந்திர பாலாஜி அதிரடியாக கருத்து சொல்லி இருக்கிறார். அதனை கீழே உள்ள வீடியோவில் பார்த்து கொள்ளவும்.

ராகுல் காந்தி, சோனியாவை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இத்தாலிகாரர்கள் என்ற வீடியோ வட மாநிலங்கள் முழுவதும் சப் டைட்டில் போடப்பட்டு அதிகம் பகிரப்பட்டு வருகிறது இதனால் தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திர பாலாஜி இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார்.

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share