தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை நீக்க tik tok – ம் 130 ரூபாயும்தான் காரணம் !

Loading...

சென்னை.,

முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதில் இருந்து நேற்றுவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் பதவியில் இருந்த எந்த அமைச்சரும் மாற்றப்படவில்லை மாறாக துறைகள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் முதல்முறையாக தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராக பதவி வகித்த ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டனின் பதவியை நீக்கி அவரின் பொறுப்பை கூடுதலாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாருக்கு வழங்கியுள்ளார் எடப்பாடி.

Loading...

இந்நிலையில் மணிகண்டன் நீக்கத்திற்கு என்ன காரணம் என்று தற்போது மூன்று விஷயங்கள் சொல்லப்படுகிறது, ஒன்று
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் பதவி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்பது, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும் ஒரு அமைப்பாகும்.

இந்த அமைப்பின் தலைவர் பதவியை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கியதில் அமைச்சர் மணிகண்டன் கடும் அதிருப்தி அடைந்தார். ஏன் என்றால் இது அவரின் கட்டுப்பாட்டில் இருந்த அமைப்பு

இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், “கடந்த வாரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுடன் கேபிள் டிவி நிறுவன தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது தனிப்பட்ட முறையில் கேபிள் டிவி வைத்திருக்கும் அனைவரும் தங்களிடம் உள்ள இணைப்புகளை உடனடியாக அரசு கேபிளுக்கு மாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

முதலில் அவர் தான் நடத்திவரும் அட்சயா கேபிள் விஷனிடம் உள்ள சுமார் 2 லட்சம் இணைப்புகளை அரசு இணைப்புக்கு மாற்ற வேண்டும்” என்றார்.
மேலும், சமீபத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படுவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு ஒன்றிணையும் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு குறித்து தன்னிடம் முதலமைச்சர் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் மணிகண்டன் குற்றம் சுமத்தினார் .

கேபிள் டிவி விவகாரம் குறித்து அமைச்சர் மணிகண்டன் வெளிப்படையாக பத்திரிகையினரிடம் பேசியதே இந்த நீக்கத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது. மேலும், மணிகண்டன் தனது மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுவந்தார் என்றும் மனு கொடுக்கவரும் கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என்ற ஒரு காரணம் கூறப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக கலாச்சாரத்தை கெடுக்கும் tik tok செயலியை தொடர்ந்து தமிழகத்தில் தடை செய்வதில் அமைச்சர் மணிகண்டன் விடாப்பிடியாக இருந்ததும், அதனை சிலர் தடுக்க நினைத்தும் அவர் ஏற்கவில்லை என்பதுதான் முக்கிய காரணம் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு tik tok செயலியும், கேபிள் டிவி கட்டணம் 130 ரூபாயாக குறைக்கப்பட்டதற்கு அவர் கொடுத்த பேட்டியும்தான் காரணமாக இருந்திருக்கிறது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2672 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*