Connect with us

#24 Exclusive

இடைத்தேர்தல் வெற்றி தனது பாணியில் அதிரடியாக பதிலளித்த அமைச்சர் சி வி சண்முகம் !

இடைத்தேர்தல் வெற்றி தனது பாணியில் அதிரடியாக பதிலளித்த அமைச்சர் சி வி சண்முகம் !

எப்போதும் அதிரடியாக மனதில் தோன்றியதை அப்படியே பேசக்கூடியவர் அமைச்சர் சி வி சண்முகம் அந்த வகையில் இடைத்தேர்தல் வெற்றி குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் சி வி சண்முகம், அவர் தெரிவித்த கருத்துக்கள் பிணவருமாறு :-

மக்களை முட்டாள் என நினைத்து கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தெளிவான தீர்ப்பை தந்திருக்கின்றனர். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. தமிழகத்தில் மக்களை பாதிக்கும் விஷயங்கள் எதுவும் இல்லை. மக்களை உணர்ச்சிகரமாக தூண்டுகின்ற எந்த நிகழ்ச்சியும் இல்லை. எந்தவித குழப்பமும் இல்லாமல், 2021-ல் தமிழகத்தை யார் ஆள வேண்டும் என மக்கள் கூறியிருக்கின்றனர். இந்த நாட்டை ஆளக்கூடிய சக்தி அ.இ.அ.தி.மு.க.வுக்கு தான் உண்டு என மக்கள் தெளிவாக சொல்லியிருக்கின்றனர்.

Loading...

அம்மா வழியில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் தீர்ப்பு அளித்திருக்கின்றனர். இந்த வெற்றி கழகத் தொண்டர்களின் வெற்றி, கூட்டணி கட்சிகளின் தொண்டர்களின் வெற்றி. அவர்களுக்கு பாதம் தொட்டு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Loading...

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அரசியலில் எல்லாம் சாத்தியம். தலைமை தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். மக்களின் இயலாமையை பயன்படுத்தி ஆசையை தூண்டிவிட்டு ஏமாற்றிய திமுகவுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Loading...

Trending