புலம்பெயர் தொழிலாளர்களின் பயணச் செலவை யார் ஏற்பது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர்களின் பயணச் செலவை யார் ஏற்பது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Loading...

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ரயில்கள் மற்றும் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான செலவை யார் ஏற்பது என்பது குறித்து உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் மக்கள் பாதிக்கப்படுவது ஒரு பக்கம் என்றால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் படும் இன்னல்கள் மற்றொரு பக்கமாக உள்ளது. இந்தியாவில் மொத்தமாக 10 கோடி பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் 45 லட்சம் பேர் மட்டுமே இதுவரை சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

Loading...

இந்நிலையில் தற்போது தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கான கட்டணத்தை யார் ஏற்பது குறித்து குழப்பம் நீடித்தது. இது குறித்து மத்திய அரசு, தொழிலாளர்கள் புறப்படும் மாநில அரசோ அல்லது சென்று மாநில அரசோ அதை ஏற்கும் எனக் கூறியது. சில இடங்களில் தொழிலாளர்களிடமே கட்டணம் வசூலிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இது சம்மந்தமான வழக்கில் பயண கட்டணத்தை தொழிலாளர்களிடம் வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டண மற்றும் பேருந்து கட்டண செலவை தொழிலாளர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*