தாயின் சடலத்தை எழுப்ப நினைக்கும் குழந்தை – புலம்பெயர் தொழிலாளரின் சோக முடிவு!

தாயின் சடலத்தை எழுப்ப நினைக்கும் குழந்தை – புலம்பெயர் தொழிலாளரின் சோக முடிவு!

Loading...

புலம்பெயர் தொழிலாளரான பெண் ஒருவர் ரயிலில் செல்லும் போதே இறந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பாதி வழியிலேயே இறங்கியுள்ளனர்.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் மக்கள் பாதிக்கப்படுவது ஒரு பக்கம் என்றால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் படும் இன்னல்கள் மற்றொரு பக்கமாக உள்ளது. இந்தியாவில் மொத்தமாக 10 கோடி பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் 45 லட்சம் பேர் மட்டுமே இதுவரை சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

Loading...

இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் வழியிலேயே பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் சொந்த ஊரான கத்திகாருக்கு செல்வதற்காக ரயில் ஏறியுள்ளார் அந்த பெண். ஆனால் உணவுப் பற்றாக்குறை, வெயில் மற்றும் மோசமான உடல்நிலைக் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பிஹாரின் முசாபர்பூர் ரயில்வே நிலையத்தில் அந்த பெண்ணின் உடலோடு அவரது குடும்பத்தினர் இறங்கியுள்ளனர்.

அந்த தாயின் சடலம் போர்வை போத்திக் கிடக்க அவர் இறந்துவிட்டார் எனத் தெரியாமல் அவரை எழுப்பி விளையாடுகிறது குழந்தை. இது சம்மந்தமான வீடியோ காட்சி இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*