சரக்கு பாட்டிலில் சுக்கு காபி – ’குடி’மகன்களை ஏமாற்றிய கும்பல்!

சரக்கு பாட்டிலில் சுக்கு காபி – ’குடி’மகன்களை ஏமாற்றிய கும்பல்!

Loading...

சரக்கு பாட்டிலில் சுக்கு காபியை அடைத்து வைத்து அதை 300 ரூபாய்க்கு விற்று ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் குடிமகன்கள் குடிப்பதற்காக டாஸ்மாக் கடைகளை உடைத்து உள்ளே புக முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் மதுபாட்டில்கள் திருடப்பட்டும் உள்ளன.

Loading...

இது சம்மந்தமாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் டாஸ்மாக் மேலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகளின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிச்செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில், மதுபானங்களை உடனடியாக டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றம் செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட மேலாளர்களிடம் அறிவுறுத்துகின்றனர்.

இதனால் மது கிடைக்காத மன உளைச்சலில் தமிழகத்தில் 5 இடங்களில் மதுவுக்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கேரளாவில் இந்த எண்ணிக்கை 7 ஆக இருக்கிறது. இந்நிலையில் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக தினமும் 12 மணி முதல் 2 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என சமூகவலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் எப்படியாவது குடிக்க வேண்டும் என்பதற்காக மதுப்பிரியர்கள் கள்ளச்சந்தையில் மூன்று மடங்கு வரை வேண்டுமானாலும் பணம் கொடுக்க தயாராக உள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் டாஸ்மாக் கடை முன்னர் நின்ற ஒரு கும்பலிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்களிடம் மது உள்ளதாகக் கூற, அதை நம்பிய அவர்கள் 300 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். மறைவான இடம் சென்றதும் சரக்கைக் குடிக்கலாம் என திறந்தபோது பாட்டிலில் இருந்தது சரக்கு அல்ல சுக்குக்காபி எனக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*