Connect with us

#24 Exclusive

பாஜகவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ! சர்ப்ரைஸ் கொடுத்த அமிட்ஸா !

Published

on

நீண்ட நாட்களாக ஆந்திராவில் பிஜேபிக்கு
தலைவராக சிரஞ்சீவி வர இருக்கிறார் என்று
வதந்திகள் வந்து கொண்டு இருந்த நிலையில் இது இப்பொழுது நம்பிக்கையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, அனேகமாக இது தீபாவளிக்கு பிறகு உறுதியாகும் என்று சிலர் கூறுகிறார்கள்.

சிரஞ்சீவிவை பிஜேபிக்கு தலைவராக கொண்டு வந்த பிறகு, அவருடைய தம்பியான பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியை பிஜேபியில் இணைக்கும் முயற்சிகள் நடைபெறக் கூடும்.

ஆந்திர அரசியலில் விழுந்து விட்ட சந்திரபாபு
நாயுடுவை மீண்டும் எழுந்திருக்க விடாமல் தடுக்கவும் ஆந்திராவில் பிஜேபியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் ஒரு மாஸ் லீடர்தேவைப்படுகிறது. இதற்காக அமித்ஷாவின் தேர்வில் முதலில் இருப்பவர் சிரஞ்சீவி தான்.

ஆந்திர மக்கள் தொகையில் ரெட்டி கம்மாக்களை விட அதிக அளவில் சுமார்
15 சதவீதம் இருப்பவர்கள் காபுக்கள் தான் ஆனால் ஆந்திர அரசியலில் காபூக்களை விட மக்கள் தொகையில் குறைவாக இருக்கும் ரெட்டிக்களும் கம்மாநாயுடுகளும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

காபுக்கள் நீண்ட காலமாகவே கம்மாக்களோடு கை கோர்த்து தெலுங்கு தேசத்தின் ஆதரவாளர்களாக இருந்து வந்ததால் அரசியலில் அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது.

காபுக்களின் நாயகனான நடிகர் சிரஞ்சீவியை பிரஜா ராஜ்ஜியம் என்கிற கட்சியை 2008- ல் ஆரம்பிக்க வைத்து 2009 சட்டமன்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட வைத்து தெலுங்கு தேசத்தின் ஆதரவாளர்களாக இருந்த காபுக்களின் ஓட்டுக்களை பிரிய வைத்ததன் மூலமாக மீண்டும் காங்கிரசைவெற்றி பெற வைத்து மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி ஆந்திர அரசியலில் தான் ஒரு கில்லாடி என்பதை நிரூபித்து விட்டே போய் சேர்ந்தார்.

சிரஞ்சீவி 2009 – ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 16 சதவீதம் சட்டமன்ற தேர்தலில் 17 சதவீதம் ஓட்டுக்களை பெற்று 2009 சட்டமன்ற லோக்சபா தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை மண்ணை கவ்வ வைத்து விட்டு சத்தமில்லாமல் காங்கிரஸ்
கட்சியில் ஐக்கியமாகி விட்டார்.

சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் புஸ்வானமாகி விட்டது. இதற்கு முக்கியமான காரணம் சிரஞ்சீவிக்கு காபுக்களின் ஓட்டு கிடைத்தது.ஆனால் காபுக்களோடு என்றும் அரசியலில் இணைந்து இருக்கும் கம்மா நாயுடுகள் தெலுங்கு தேசத்தின் ஆதரவில் இருந்து வெளி வரவில்லை.

இதனால் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று சிரஞ்சீவியை ஆந்திர மக்கள் கொண்டாடினாலும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் 2009 தேர்தலில் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கு தேசத்தின் ஓட்டுக்களை பிரிய வைத்து வெற்றி பெற்று சிரஞ்சீவியின் முதல்வர் கனவுக்கும் முற்று புள்ளி வைத்து விட்டார்கள்.

இது சிரஞ்சீவிக்கு புரியவே நீண்ட நாளாகி
இருக்கும் . அதனால் தான் தற்போது ரஜினி கமலுக்குஅரசியல் வேண்டாம் ப்ளீஸ் என்று அட்வைஸ் செய்து கொண்டு இருக்கிறார்.

அரசியலில் அடிபட்ட புலியான சிரஞ்சீவி ஒதுங்கி இருந்தாலும் அவர் தனித்து நின்று
2009 – தேர்தலில் பெற்ற 17 சதவீத வாக்குகள்
சிரஞ்சீவியை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர இருக்கிறது. இதற்காக சிரஞ்சீவி யின் மனதை பிஜேபி கரைத்து வருகிறது.

சிரஞ்சீவி ஒன்றும் ஆந்திர அரசியலில் அட்டர்
பிளாப்பாகி விடவில்லை. தன்னுடைய முதலும் கடைசியுமான 2009 தேர்தலில் 17 சதவீத வாக்குகளும் 18 எம்எல்ஏ க்களையும் பெற்று இருந்தார். இதை தமிழகத்தில் கமலினால் 5 தேர்தல் கடந்தாலும் பெற முடியுமா என்பது சந்தேகம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட TTV தினகரனே 5% குறைவான வாக்குகளைத்தான் பெற்றார்.

ஆந்திர அரசியலில் ஜெகன் மோகன் ரெட்டி
மூலமாக ரெட்டிக்களின் ஆதிக்கம் வலிமையாவதை விரும்பாத காபுக்களும் கம்மா நாயுடுக்களும் தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் தெலுங்கு தேசம் வலிமையாக இருந்தால் அடுத்த வாய்ப்புக்காக காத்து இருப்பார்கள்.

ஆனால் தெலுங்கு தேசத்தில் இருந்து எம்.பி
எம்.எல்.ஏக்கள் பிஜேபி பக்கமாக செல்வதால் தெலுங்கு தேசத்தின் மீது கம்மாக்களும் காபுக்களும் நம்பிக்கை இழந்து பிஜேபி பக்கமாக பார்வையை திருப்பி வருகிறார்கள். பிஜேபியின் நோக்கம் இது தான். இதற்காகத்தான் காத்து இருந்தது.

பிஜேபி பக்கமாக இவர்களின் பார்வை விழுந்தாலும் பிஜேபி யின் ஆதரவாளராக மாறவேண்டும் என்றால் அதற்கு மக்களை கவரக் கூடிய தலைவர் தேவை. அந்ததலைவரும் காபுக்களில் இருந்து ஒருவராகி விட்டால் காபுக்களையும் கம்மாக்களையும் இழுத்து அடுத்த
தேர்தலில் ஆந்திர அரசியலை கைப்பற்றி விடலாம் என்று அமித்ஷா கணக்கு போடுகிறார்.

இதற்கு தான் சிரஞ்சீவி தேவைப்படுகிறார்.
சிரஞ்சீவி யை ஆந்திர பிஜேபியில் தலைவராக கொண்டு வந்து விட்டால் காபுக்களின் ஆதரவை வைத்து பிஜேபி யை 2வது இடத்திற்கு கொண்டு வந்துவிடலாம். பிஜேபி பலம் பெற ஆரம்பித்து விட்டால் காபுக்களை அடுத்து கம்மாக்களும் பிஜேபிக்கு ஆதரவாக வந்து விடுவார்கள்.

சந்திரபாபு நாயுடுவினால் இனி தனியாக
அரசியலில் எழுந்து விட முடியாது. அவருக்கு
நிச்சயமாக பிஜேபி யின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் பிஜேபி அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை நாயுடுவை கண்டு கொள்ளாது சிரஞ்சீவியை கொண்டு. வந்து பிஜேபி யை வளர்த்தாலும் தெலுங்குதேசத்தின் வாக்கு வங்கி எந்த சூழ்நிலையிலும் 20 % குறையாது.

அதனால் அடுத்த தேர்தலை எதிர் கொள்ள
பிஜேபிக்கு தெலுங்கு. தேசமும் தெலுங்கு தேசத்திற்கு பிஜேபியும் தேவைப்படுவதால்
ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்த நாயுடு
பிஜேபி விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டிய. நிலையை ஜெகன் மோகன் ரெட்டி உருவாக்கி விடுவார்

ஆந்திராவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை ஆந்திர மக்களின்
மனதில் விதைக்கவே சிரஞ்சீவியை நோக்கி
பிஜேபி கை நீட்டுகிறது.சிரஞ்சீவியும் இப்பொழுது சைரா நரசிம்ம ரெட்டியின் மூலமாக மக்களிடையே வரவேற்பை பெற்று தெம்பாகி விட்டார். அதனால் மீண்டும் அரசியலில் மிக ஆழமாக பிஜேபி யின் மூலமாக கால் பதிக்க நினைக்கிறார். இது விரைவில் தீபாவளிக்கு பிறகு அடுத்த மாதத்திலேயே நிறைவேறும் என்கிறார் அரசியல் விமர்ச்சகர் திரு விஜயகுமார்.

சிரஞ்சீவி தொடர்ந்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசிவருவதும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை சந்தித்து இரண்டு மணிநேரம் பேசியது, திரையரங்கில் வரவேற்றது போன்ற தகவல்கள் இதனை உறுதி படுத்தும் விதமாக அமைந்துள்ளன. அமிட்ஷா திட்டம் வகுத்தால் அது நிச்சயம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு பாஜக தொண்டர்கள் இடையே உண்டு, இந்த முறையும் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் உள்ளனர்.

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share