உயிரை கொல்ல அரசே டார்கெட் நிர்ணயிப்பதா? பிரபல நடிகர் கண்டனம்

உயிரை கொல்ல அரசே டார்கெட் நிர்ணயிப்பதா? பிரபல நடிகர் கண்டனம்

பொதுமக்களின் உயிரை கொல்ல ஒரு அரசே இலக்கு நிர்ணயிப்பது என நடிகர் மயில்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்

நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்த நிலையில் சுஜித்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் மயில்சாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

Loading...

ஒரு குழந்தையை பெற்றால் மட்டும் போதாது, அந்த குழந்தை தனியாக விபரம் தெரிந்து தானாகவே ஒரு வேலையை செய்யும் வரை அவர்களுடன் பெற்றோர்க்ள் இருக்க வேண்டும். அரசை மட்டுமே குறை சொல்லிக்கொண்டு இருப்பது சரியல்ல. மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் ஏதும் நடக்காதவாறு அரசும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்

Loading...

மேலும் டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நடிகர் மயில்சாமி, ‘பொதுமக்களின் உயிரை கொல்ல அரசே இலக்கு நிர்ணயிப்பது சரியா? என்று கேள்வி எழுப்பியதோடு இந்த ஆண்டு எத்தனை பேரை கொள்ளலாம்? என்று அரசு இலக்கு நிர்ணயிப்பது கண்டனத்துக்குரியது என்று, கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை குறைத்து, மதுப்பழக்கத்தை மக்களிடம் இருந்து விடுவிக்க அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கூறினார்

மேலும் மதுப்பழக்கத்திற்கு ஏராளமான உயிர்கள் இழக்கப்பட்டு வரும் நிலையில் மதுவிற்கு இலக்கு நிர்ணயிப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்

Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *